தொடர்வண்டி துறை நிதி நிலை அறிக்கை தமிழகத்துக்கு ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அய்யா அவர்கள் கூறியுள்ளார்
விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வங்க பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்பதைவிட மேற்கு வங்கத்துக்கான பட்ஜெட் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 56 ரயில்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே தமிழகத்திற்குள்ளும், தமிழகத்தின் வழியாகவும் செல்லக் கூடியவை. இதில் 2 ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்படுவை.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பகல், இரவு நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மின்மயமாக்கும் திட்டம், இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
பாமக அமைச்சரின் முயற்சியால் சென்னை பரங்கிமலையில் இருந்து புதுச்சேரிக்கு அறிவிக்கப்பட்ட ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று ராமதாஸ் அய்யா அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment