நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, March 9, 2011

தமிழக அரசியலில் முதன்முறையாக-பா.ம.க அசத்தல்


2011 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ம.க வுக்கு 31 தொகுதிகள் ஓதுக்கபட்டன.கூட்டணி நலன் கருதி பாமக 1 தொகுதியை தியாகம் செய்து 30 இடத்தில் போட்டியிடுகிறது

இது தமிழக அரசியலில் முதன்முறையாக பாமக செய்துள்ளது.எனவே இக்கூட்டணி அமோக வெற்றிபெறுவதற்க்கான முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

சென்னை, மார்ச் 9ல் பொங்கு தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் மருத்துவர் அய்யா அளித்த பேட்டியிலிருந்து

கூட்டணியின் நலன் கருதி நாங்கள் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
 

மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவு குறித்து விவாதிப்பதற்காக பா.ம.க.வின் மாணவர் அணிக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.


பொது நுழைவுத் தேர்வு முடிவை கண்டிக்கும் வகையில் பா.ம.க. மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


 தி.மு.க. கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிடைத்த தொகுதியை எந்தக் கட்சியும் விட்டுக் கொடுத்தது என்பது இதுவரை நடந்ததில்லை.


எனினும், எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற யேவண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக பா.ம.க.வுக்கு தரப்பட்ட தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளோம்.


பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் ராமதாஸ்.




No comments: