மது கம்பனிகளுக்கு ஆதரவாக டோனி விளம்பரத்தில் நடித்ததால் சென்னையில் மட்டைபந்து வீரர் டோனி தங்கியிருந்த உணவு விடுதியை பசுமைத்தாயகம் அமைப்பினர் திடீர் முற்றுகையிட்டனர். இதனால் தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஊடகங்கள் மூலம் இந்த செய்தி காட்டு தீ போல பரவியதால் டோனி அச்சமடைந்துள்ளார்..
புகைப்படங்கள் சில
சென்னை : அடையாறில் டோனி தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட முயன்ற 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. தற்போது இவர், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அடையாறில் உள்ள பார்க் ஷெரட் டன் ஓட்டலில் தங்கியிருக்கிறார்.
தற்போது, ஒரு மதுபான விளம்பரத்தில் டோனி நடித்து வருகிறார். அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று டோனிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதற்கான எவ்வித அறிவிப்பையும் டோனி வெளியிடவில்லை.
இந்நிலையில், ‘பசுமை தாயகம்’ அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அருள் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர், டோனி தங்கியிருக்கும் பார்க் ஷெரட்டன் ஓட்டலை நேற்று காலை முற்றுகையிட முயன்றனர். டோனிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முற்றுகையிட முயன்ற பசுமை தாயகம் மாநில பொதுச் செயலாளர் அருள், வ.ஆ. பத்மநாபன், கனல் கண்ணன், பாண்டியன், ஜெயராமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

No comments:
Post a Comment