சென்னை, ஜூலை.28:
காரசாரமாக நடந்த பாமக பொதுக்குழுவில் திமுக கூட்டணியை முறித்துகொல்வது என தீர்மானிக்கப்பட்டது.பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள பல்வேறு காரணங்களை காரசாரமாக அடுக்கி, திமுகவுடனான கூட்டணியை உடனடியாக முறித்துக்கொள்ளவேண்டும் என வலியுறித்தினர்.
பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.க. எந்த திராவிட கட்சியையும் சாராமல் தனிமையில் செயல்பட்டு மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். அந்த வழியில் நாம் முன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.
இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.
நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.
பாமக நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் பேசும்போது, "கடந்த காலங்களில் நாம் பல பாடங்களை, படிப்பினையை பெற்றுள்ளோம். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெற்றது சரியான அணுகுமுறைதான்.
தமிழ் மக்களை பாதுகாக்க மாற்று அரசு அமைவது அவசியம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் மக்களை காப்பாற்றியதாக வரலாறு இல்லை. வார்தைஜாலம், பழி வாங்குவது, இலவசம் வழங்குவது போன்றவற்றையும் இரண்டு திராவிட கட்சிகளும் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
இந்த இரண்டு கட்சிகளின் செயல்பாடுகளால் அடிதட்டு மக்களின் வாழ்க்கை நாசமாகி வருகிறது. மதுவினால் மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது. இதை எதிர்த்து போராடுவது டாக்டர் ராமதாஸ் மட்டும்தான். முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை தவிர சீர்திருத்த பணியில் அவர்கள் ஈடுபடுவது இல்லை.
எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் மாற்று அணி அமைக்க வேண்டும். அதுதான் மக்கள் கூட்டணி," என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் இதே கருத்தையே வலியுறுத்தினார்கள்.

இறுதியில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது....
No comments:
Post a Comment