நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, November 18, 2011

வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,





உரவிலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியதாலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் அனைத்து உரங்களையும் வழங்க மாநில அரசு தவறியதாலும் தமிழ்நாட்டில் உரவிலை 100 முதல் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. 

அதுமட்டுமின்றி உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டை போக்கவும், மானிய விலையில் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பா... சார்பில் வரும் 21ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதற்குள்ளாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தையும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை முறை ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாதாரண  பேருந்துகளில்கூட குறைந்த அளவு கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சில தடங்களில் பேருந்து கட்டணம் 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகளில் தனியார் ஆம்னி  பேருந்துகளைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இனி நடைபயணம்தான் மேற்கொள்ள வேண்டுமோ என்று பொதுமக்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால் விலை உயர்வால் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால்விலையை ரே நேரத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். மின்வெட்டை செய்ய முடியாத தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நிதி நெருக்கடி ஏற்படும்போது அதை சரிசெய்ய கசப்பு மருந்து கொடுக்கப்படுவது இயல்பானதுதான். ஆனால், தமிழக அரசு கசப்பு மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்து விஷமாக்கியிருக்கிறது. இதனால் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டத்துடன் மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கண்டித்தும் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எனவே வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக மானிய விலையில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வையும், பால்விலை உயர்வையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ராமதாஸ்  அய்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: