நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 15, 2011

மருத்துவர் அய்யா பார்வை - கல்பாக்கம்


மருத்துவர் அய்யா பார்வை - கல்பாக்கம்
கல்பாக்க‍த்தில் அமைந்துள்ள‍ அணு உலைகள் போல் உலகில் எந்த பகுதிகளிலும் அமைக்க‍ப்ப‍ட்ட‍து இல்லை என்றும் செயல்படுவதும் இல்லை என்றும் பா... நிறுவனர் இராமதாஸ் அய்யா  கூறியுள்ளார்.


     மேலும், கல்பாக்க‍ம் அணு உலைகளை நிறுத்த வேண்டும், மூட வேண்டும் என்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரைவில் பா... சார்பில் மருத்துவக் குழு ஒன்றுசெல்ல உள்ளது என்றும்,  அக்குழு அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் கூறினார்.
     மேலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், அணு உலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், உலகின் மிகப் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணு உலையை வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்றும் அய்யா கூறினார்.

உலகில் 444 அணு உலைகள் 2002-ஆம் ஆண்டு இருந்தன.அவற்றில் 960 அணு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.இதன் காரணமாக 444-ஆக  இருந்த அணு உலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 437-ஆக குறைக்க்கபட்டுவிட்டது அணு உலையின் கதிர் வீச்சு காற்று வழியாகவும், நீர் வழியாகவும் கதிர் வீச்சு ஏற்படுகிறது... என்பது குறிப்பிடதக்கது..

கல்பாக்கம் ஒரு பார்வை

கடலோரம் அமைந்துள்ள இவ்வூரின் அமைவிடம் 12.56° N 80.16° E ஆகும் கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது


கல்பாக்கத்தில் இரு அணுமின் நிலையங்களும், ஒரு அணு ஆராய்ச்சி மையமும். சென்னை அணு மின் நிலையம் 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.


No comments: