நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 15, 2011

வன்னிய வீரா்களில் தற்பொழுது போதி தர்மன்...


வன்னிய வீரா்களில் தற்பொழுது போதி தர்மன்...

திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக புதைக்கப்பட்ட வரலாற்றுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்

தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகாரமாக திரையிடபட்டுள்ள 7-ம் அறிவு படத்தின் ம் சாதனைகள்..

மறைக்கப்பட்ட வன்னிய பல்லவ அரசாங்கத்தின் கந்தவா்மன் அவா்களின் புதல்வர் போதி தர்மன் அவர்களுடைய வரலாற்றை இவ்வுலகிற்க்கு அளித்த தயரிப்பாளர் திரு உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வன்னிய மக்கள் சார்பாக கோடன கோடி நன்றிகள்....









கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற
 மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். 

காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர். 
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, 
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே
 உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா,ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு'பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... 


 புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு
இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ
என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.
குங்ஃபூவும் போதிதர்மனும்
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.
8. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
9 போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.


 குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.
கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் 

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது
4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு  

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)


 8.
ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார். 

9.
தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.
10.
போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.




Friday, September 23, 2011

வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சட்டகல்லுாரி தொடங்க அனுமதி....

 திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி துவக்க, வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு அனுமதி வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நேற்று 23-9-11 -ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில், திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக் கல்லூரி என்ற பெயரில் துவக்க அனுமதி கோரி, அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் என்.ஓ.சி., வழங்கவில்லை
.
இதையடுத்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, சட்டத் துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அனுமதி கோரிய விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதையும், சட்டத் துறை நிராகரித்து, கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. அதில், "சட்டக் கல்லூரிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதியில்லை. செங்கல்பட்டு, வேலூரில், ஏற்கனவே சட்டக் கல்லூரிகள் இருப்பதால், திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி தேவையில்லை' என கூறப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜி.கே.மணி, மனு தாக்கல் செய்தார். "விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவண்ணாமலையில் சட்டக் கல்லூரிகள் இல்லை. திண்டிவனத்தில் இருந்து 100 கி.மீ., தூரத்தில் வேலூர், 60 கி.மீ., தூரத்தில் செங்கல்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை, பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன' என வாதாடப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு: பல்கலைக் கழக மானியக் குழு வழிமுறைகளின்படி, மனுதாரரின் சட்டக் கல்லூரியில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிபந்தனையை மனுதாரர் பூர்த்தி செய்துள்ளார். ஏற்கனவே ஒரு சட்டக் கல்லூரி அந்தப் பகுதியில் இருந்தால், அதற்காக புதிதாக சட்டக் கல்லூரி துவக்க அனுமதி மறுப்பதில் நியாயமில்லை என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொகை, அங்கு இருக்கும் சட்டக் கல்லூரி எந்த அளவுக்கு அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை மட்டும், சட்டத் துறை பரிசீலித்துள்ளது. கடலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை ஏன் கணக்கில் கொள்ளவில்லை என தெரியவில்லை. இந்த மூன்று மாவட்டங்களுடன், விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்த்தால், மக்கள் தொகை 92 லட்சத்து 85 ஆயிரம் வருகிறது.

தமிழகத்தில் 636 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால்,சட்டக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 10 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், சட்டக் கல்லூரி துவக்கத் தேவையில்லை என்ற நிலையை அரசு எடுத்திருப்பது, ஏமாற்றம் அளிக்கிறது. மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, சட்டக் கல்லூரிகள் துவக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசே ஆர்வம் காட்டினால், அதிக சட்டக் கல்லூரிகளை துவக்கலாம். இல்லையென்றால், அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் தனியாரை அனுமதிக்கலாம். எனவே, சட்டத் துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

திண்டிவனத்தில் சட்டக் கல்லூரி துவக்க, மனுதாரருக்கு அனுமதி அல்லது என்.ஓ.சி., வழங்க, சட்டத் துறைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இதையடுத்து, அபிலியேஷன் மற்றும் ஒப்புதல் கோரி, அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் இந்திய பார் கவுன்சிலை மனுதாரர் அணுக வேண்டியிருப்பதால், ஒரு வாரத்துக்குள் சட்டத் துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனபாலன் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, September 15, 2011

நமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.......


இட ஓதுக்கீடு போரட்ட தியாகிகள்  நினைவு நாள் 

அனைவரும் வீடு தோறும் மெழுகுவத்தி ஏற்றி இட ஓதுக்கீடு போரட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.....



நமது உறவை மறக்காதீருப்போம்
  நமது உறவுகளை நேசிப்போம்....

Friday, August 19, 2011

அன்றே சொன்னர் மருத்துவர் சின்ன அய்யா....

மருத்துவர் அன்புமணியின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர் செயலலிதா....


                                               புதிய தலைமைச்செயலகம்

                      

                                                  அரசு மருத்துவமனை


06-01-2011 அன்றே சொன்னார் மருத்துவர் அன்புமணி அய்யா....

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை அமைக்கலாம்: அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

சென்னை:6-01-2011

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியது:-  

            தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடுதலை சிறுத்தைகளும் முதன்முறையாக இணைந்த தேர்தல் விடுதலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொடரும்.

             பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் வரவேற்போம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வந்தால் எதிர்த்து போராடுவோம்.  

           கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட்டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார்களும், தனியார் மருத்துவமனைகளும் தான் லாபம் அடைந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவமனைகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மருத்துவமனைகள் தரத்தை உயர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.

            மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண்டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.  சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

            புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம்.  இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில் நேற்று(19-8-2011) சட்டசபையில் பேசிய முதல்வர் செயலலிதா புதிய தலைமைச்செயலகம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்றார்....

மருத்துவர் சின்ன அய்யாவல் துவக்கி வைக்கபட்ட ”சங்கையா” திரைப்படம்

              சங்கையா பட துவக்க விழா










திரைப்பட விழாக்களில் அரிதாகக் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களில் ஒருவர் நமது பாமகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ். அவர்கள்

அப்படி அவர் அரிதாகக் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி 'சங்கையா' திரைப்படத் துவக்கவிழா.

ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினரே அவர்தான். ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் படத்தை கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். இவர் அய்யன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து பாடல்களை எழுத, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

அருண்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்கின்றனர்.

படத் துவக்கவிழாவில் பங்கேற்ற அன்புமணி, குழுவினரை வாழ்த்தியதோடு, சமூகத்துக்கு பயனுள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றார். பசும்பொன் தேவர் கழகத் தலைவர் வெள்ளைச்சாமி தேவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Wednesday, July 27, 2011

பாமக வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்...தமிழக மக்களை காக்க பாமக தலைமையில் 3 வது அணி.....

சென்னை, ஜூலை.28: 

காரசாரமாக  நடந்த  பாமக பொதுக்குழுவில் திமுக கூட்டணியை முறித்துகொல்வது என  தீர்மானிக்கப்பட்டது.பாமக  நிறுவனர் மருத்துவர்  அய்யா தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில்  பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள பல்வேறு காரணங்களை காரசாரமாக அடுக்கி, திமுகவுடனான கூட்டணியை உடனடியாக முறித்துக்கொள்ளவேண்டும் என வலியுறித்தினர்.





பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.க. எந்த திராவிட கட்சியையும் சாராமல் தனிமையில் செயல்பட்டு மக்களை நாம் காப்பாற்ற வேண்டும். அந்த வழியில் நாம் முன் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.காலையில் தொடங்கிய கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.

 இனி திமுகவுடன் மட்டுமல்ல, அதிமுகவுடனும் கூட்டு சேரக்கூடாது. தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக புதிய அணியை உருவாக்க வேண்டும். இனி வரும் எந்த தேர்தலிலும் நாம் சீட் கேட்கின்ற நிலை ஏற்படக்கூடாது. நாம் தான் சீட் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரசியல் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கட்சிகள் தமிழரின் உரிமையை விட்டுக்கொடுக்கின்றனர். தமிழர்களுக்காக பாடுபடும் மருத்துவர் ராமதாஸ் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசியலில் இருந்து சினிமா முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். சினிமா தொடர்பே இல்லாமல் பாமக ஆட்சியமைக்க வேண்டும்.

நமது வலிமையை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திமுகவினரின் செயல்பாடுதான் நாம் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்ற நிலை இனி ஏற்படக்கூடாது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வருங்காலத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு வலுவான அணியை உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று அவர்கள் பேசினர்.



பாமக நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் பேசும்போது, "கடந்த காலங்களில் நாம் பல பாடங்களை, படிப்பினையை பெற்றுள்ளோம். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெற்றது சரியான அணுகுமுறைதான்.

தமிழ் மக்களை பாதுகாக்க மாற்று அரசு அமைவது அவசியம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் மக்களை காப்பாற்றியதாக வரலாறு இல்லை. வார்தைஜாலம், பழி வாங்குவது, இலவசம் வழங்குவது போன்றவற்றையும் இரண்டு திராவிட கட்சிகளும் செய்து வருகின்றன. அப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

இந்த இரண்டு கட்சிகளின் செயல்பாடுகளால் அடிதட்டு மக்களின் வாழ்க்கை நாசமாகி வருகிறது. மதுவினால் மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது. இதை எதிர்த்து போராடுவது டாக்டர் ராமதாஸ் மட்டும்தான். முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை தவிர சீர்திருத்த பணியில் அவர்கள் ஈடுபடுவது இல்லை.

எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் மாற்று அணி அமைக்க வேண்டும். அதுதான் மக்கள் கூட்டணி," என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் இதே கருத்தையே வலியுறுத்தினார்கள்.

இறுதியில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது....



Wednesday, July 20, 2011

வறட்டுப் பிடிவாதமன்றி வேறு என்ன ?-சவுக்கு

வறட்டுப் பிடிவாதமன்றி வேறு என்ன ?அச்சிடுகமின்-அஞ்சல்
 
சவுக்கு
  
சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமச்சீர்க் கல்விக்கான பாடதிட்டங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு ஏற்படுத்திய பொம்மைக் கமிட்டி எவ்விதமான உருப்படியான ஆய்வையும் செய்யவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகவே கண்டுபிடித்திருக்கிறது.

அந்த பொம்மைக் கமிட்டிக்கான வரைவு அறிக்கையையும், இதர வேலைகள் அனைத்தையும் செய்தவர், பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சபிதா ஐஏஎஸ் என்பதை தெளிகாவச் சுட்டிக்காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

high_court
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 2 முதல் 5 வகுப்புகளுக்கும், 7 முதல் 10 வகுப்புகளுக்கும், சமச்சீர்க் கல்வியை எப்படி இந்த ஆண்டே அமல்ப்படுத்துவது என்பதை அலசி ஆராயவே கமிட்டி அமைத்ததே தவிர, இருக்கும் புத்தகங்கள் மோசம் என்று சொல்வதற்கு கமிட்டி அமைக்கவில்லை அதனால், பாடப்புத்தகங்கள் மோசம், இந்த ஆண்டு அமல்ப்படுத்த இயலாது என்ற அறிக்கை வரம்பை மீறிய ஒரு அறிக்கை.

மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பாக நியமிக்கப் பட்ட இரண்டு உறுப்பினர்களான டாக்டர் மல்லா பிரசாத் மற்றும் பேராசிரியர் திரிபாதி ஆகிய இருவரும், இந்தப் பாடப்புத்தகங்களை ஆராய்ந்து, பாடப்புத்தகங்களில் சில குறைகள் இருந்தாலும், பெரும்பாலும், மிகச் சிறப்பாகவே இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு உறுப்பினராக விஜயலட்சுமி சீனிவாசன், மெட்ரிகுலேஷன் மற்றும் சமச்சீர் கல்வி ஆகிய இரண்டுமே, தேசிய கல்விக் கொள்கை வகுத்தது போல இல்லை, ஆனால், சமச்சீர் கல்வியின் பெரும்பாலான பாடத்திட்டங்கள் சிற்சில குறைகளைத் தவிர ஏற்புடையதாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஏவி பள்ளிகளின் முதலாளி, ஜெய்தேவ், சமச்சீர் கல்வி சிறப்பான நோக்கமாக இருந்தாலும், தற்போது உள்ள தரத்தை குறைப்பது அதற்கு தீர்வாகாது. ஆனால் இப்போது இருக்கும் புத்தகங்களை பார்த்தால், தரம் குறைந்து சமச்சீர் கல்விக்கான நோக்கமே வீழ்த்தப் பட்டு விட்டது என்பது புரிகிறது என்கிறார்.

திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி என்ன கூறுகிறார் தெரியுமா ? தற்போது உள்ள அனைத்து சமச்சீர் பாடப்புத்தகங்களும் மோசம். அனைத்தையும் மொத்தமாக திருத்த வேண்டும்.   இது உடனடியாக முடியாது குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகளாகவது ஆகும்.   அதைச் செய்து விட்டு சமச்சீர் கல்வியை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.   வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் என்று சவுக்கு எழுதியிருந்தது இதைச் சுட்டிக் காட்டித் தானே ?

சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பது நோக்கமாக இருந்தால், அதில் உள்ள குறைகளைச் சரி செய்வதற்கு வழி சொல்லுவார்கள். சமச்சீர் கல்வி வரவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பவர்களை கமிட்டி உறுப்பினர்களாகப் போட்டு ஒரு பொம்மைக் கமிட்டியை நியமித்தால் இப்படித் தான் கருத்த சொல்வார்கள். ஆனால், உயர்நீதிமன்றம், இந்த பொம்மைக் கமிட்டியின் முடிவுக்கு பெரும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.

மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சமச்சீர் கல்வித் திட்டம், அவசர கோலத்தில் அமல்படுத்தப் பட்டுளளது என்ற வாதத்தை முன் வைத்தன. இந்த வாதம் சரியா என்பதை ஆராய்வதற்காக, முத்துக்குமரன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாத என்று தொடுக்கப் பட்ட வழக்கின் கோப்பு தற்போது மீண்டும் ஆராயப் பட்டது. அதை ஆராய்ந்த போது 2006ம் ஆண்டு முதல் முழுமையான ஆராய்ச்சிக்களை மேற்கொண்ட பின்னரே, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவிலும், கடந்த ஆட்சி அறிமுகப் படுத்திய காரணத்தினாலேயே, இந்தப் பாடத்திட்டம் சரியில்லை, 200 கோடி ரூபாய் தவறான கொள்கைகளால் வீணடிக்கப் பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த நேரத்திலே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
“ஓட்டு வாங்குவதற்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நடந்து கொள்ளும் அரசியல் கட்சிகளைக் கண்டால் எங்களுக்கு கவலையாக இருக்கிறது.   அரசியல் அமைபுச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாகவே அவர்களைப் பார்க்கிறது என்பதை காண மறுக்கிறார்கள்.   ஆட்சிக்கு வரும் ஒரு அரசியல் கட்சி ஏற்கனவே இருந்த ஒரு அரசு எடுத்த முடிவை, அந்த முடிவு மற்ற மாநிலங்களையோ, தேசத்தையோ எப்படி பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல், எளிதாக ரத்து செய்யக் கூடாது. பெரும்பாலானவர்களை கலந்து ஆலோசித்து அரசு நிர்வாகத்தில், எடுக்கப் பட்ட ஒரு முடிவை, அந்த முடிவு அரசியல் முடிவாக இல்லாத பட்சத்தில், அடுத்து வரும் அரசாங்கம் அந்த முடிவை செயல்படுத்த வைக்கப் பட வேண்டும்.”

மாநில அரசு, சமச்சீர் கல்விலை நாங்கள் கைவிடவில்லை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்துவோம் என்று தெரிவிக்கிறார். ஆனால், உச்ச நீதிமன்றம், இந்த அண்டு செயல்படுத்துவதற்கான வழி வகைகளை ஆராயச் சொல்லித் தான் தீர்ப்பளித்திருக்கிறதே தவிர, அடுத்த ஆண்டு எப்படிச் செயல்படுத்துவத என்பதைப் பற்றிப் பேசவில்லை.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு கமிட்டியை அமைத்தாலும், அந்தத் தீர்ப்பை சரியாக புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை எப்படி அமல்படுத்துவது என்பதை ஆராயுங்கள் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததே ஒழிய, இந்தப் பாடப்புத்தகங்களை ஆராயுங்கள் என்று சொல்லவேயில்லை. ஆனால், கமிட்டியின் (பொம்மைக் கமிட்டி) முதல் கூட்டம் நடந்த அன்றே, உச்ச நீதிமன்றம், பாடப்புத்தகங்களை ஆராயச் சொன்னதாகவே புரிந்து கொண்டு, அந்த நோக்கத்திலேயே கமிட்டி செயல்பட்டிருக்கிறது.
2011-2012 கல்வி ஆண்டுக்கு இந்தப் பாடப்புத்தகங்களை பயன் படுத்த முடியுமா என்று ஆராயுங்கள் என்று சொல்லாத போது, கமிட்டி அதைத்தான் செய்தது. அது மட்டுமல்ல, இந்தக் கமிட்டியின் பெரும்பாலான வேலைகளையும், அந்தக் கமிட்டியின் வரைவு அறிக்யையும் மாநில அரசின் கல்வித்துறைச் செயலாளரே தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
 2502862
தேர்தல் முடிவுகள் மே 13 அன்று வெளியானது. 16 மே அன்று புதிய அரசு பொறுப்பேற்றது.   முதல் கேபினெட் கூட்டம் 22 மே அன்று ஒரு மணி நேரம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சமச்சீர் கல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் ஒரு மணி நேரம் விவாதிக்கப் பட்டுள்ளன. உடனடியாக 23 மே அன்று, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கைவிடுவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய புத்தகங்கள் அச்சடிக்க ஆணை வழங்கப் பட்டுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.
சமச்சீர் கல்விக்கு பதில் பழைய புத்தகங்களையே பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் முடிவு எந்த விதமான நிபுணர் குழுவின் ஆய்வுக்கும் உட்படுத்தப் படாமல், மறு ஆய்வு செய்யப் படாமல் எடுக்கப் பட்டது என்பது தெரிய வருகிறது. சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க வேண்டும் என்ற இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம், தள்ளி வைப்பது என்ற போர்வையில் சமச்சீர் கல்வியை கைவிடுவது என்றே எண்ணத் தோன்றுகிறது.   உண்மையில் சமச்சீர் கல்வி கைவிடப் படவில்லை என்று அரசு நினைத்திருக்குமேயானால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அது அமல்படுத்தப் படும் என்பதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பதே, சமச்சீர் கல்வியை கொண்டு வந்த அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்பதே நோக்கம் என்பது புலனாகிறது.
சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் சட்டத் திருத்தம் செயல்படுத்தப் படுமேயானால், இளம் உள்ளங்களில் அது பெரும் குழப்பத்தை எற்படுத்தும், ஆகையால் நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.
தனித்தனியாக கருத்து தெரிவித்த கமிட்டி (பொம்மைக் கமிட்டி) உறுப்பினர்களில் பெரும்பாலானோர் சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கமிட்டி கூட்டத்தின் போது கருத்து தெரிவித்த தமிழக அரசு தேர்ந்தெடுத்த ஒரு உறுப்பினர் (விஜயலட்சுமி சீனிவாசன்) சமச்சீர் கல்வி காலத்தின் தேவை என்றும், தற்போது உள்ள, ஆங்கிலோ இந்திய மெட்ரிகுலேஷன் பள்ளி முறைகள் முழுமையானதல்ல என்றும், தேசிய கல்விக் கொள்கையின் படி அமைந்தவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவரது கருத்து கமிட்டியின் இறுதி அறிக்கையில் இடம் பெறாமல் தவிர்க்கப் பட்டுள்ளது.

டாக்டர் முத்துக்குமரனின் கமிட்டி ஒரு நீண்ட ஆய்வுக்குப் பின்னரே சமச்சீர் கல்விக்கான இந்த அறிக்கையை அளித்திருக்கிறது.   அந்தக் கமிட்டியின் அறிக்கையும் அப்படியே அமல்படுத்தப் படவில்லை. முத்துக்குமரன் கமிட்டியின் அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக ஒரு நபர் கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டு, அந்தக் கமிட்டி மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு பள்ளிகளை ஆய்ந்து அறிந்த பிறகே, 2010ல் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. அதனால், மாநில அரசும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், சொல்வது போல, அவசர கோலத்தில் எடுக்கப் பட்ட முடிவு இது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தக் காரணங்களால், சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தலாம் என்ற சட்டத் திருத்தம் ரத்து செய்யப் படுகிறது.
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பள்ளிகள் 22 ஜுலை 2011க்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றமும், கமிட்டி உறுப்பினர்களும் குறிப்பிட்டது போல, தேவையற்ற பாடப் பகுதிகளை நீக்கி விட்டு உரிய பாடப்புத்தகங்களை அரசு வழங்க வேண்டும்.
மாணவர்கள் தான் இந்த தேசத்தின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு நல்ல முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து, இரண்டு இடது சாரிக் கட்சிகளுமே மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் பாடப் புத்தகங்கள் தரப்படாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். எந்தப் பாடத் திட்டத்தையாவது வைத்தால் போதும் என்கிற நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, உடனடியாகப் புத்தகங்களை விநியோகித்து மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் விரிவான கல்விச் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாடத் திட்டத்தில் நீக்க வேண்டியதை நீக்கியும், சேர்க்க வேண்டியதை சேர்த்தும் மூன்று மாதத்துக்குள் துணைப் பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இத்தீர்ப்பு வழி செய்துள்ளது.

இந்நிலையில் திமுக அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கிவிட்டுப் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும், கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும், உச்ச நீதிமன்றம் விரைந்து, மேல் முறையீடு செய்துள்ளனர்.

அரசியலில், பிடிவாதம் பிடிப்பதும், போட்டா போட்டி போடுவதும் சகஜம் தான். ஆனால், இவர்களின் பிடிவாதத்தால் ஒன்றேகால் கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படுகிறது எனும் போது, இந்தப் பிடிவாதத்தை கண்டிக்காமல் எப்படி இருப்பது ?

ஒரு முழுமையான மாதத்துக்கு, எவ்வித பாடத்திட்டமும் கொடுக்கப் படாமல், மாணவர்கள் தினந்தோறும், வகுப்பறையில் ஆட்டமும் பாட்டமும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இதற்குக் காரணமாக ஒரு மாநில அரசு இருக்கிறதென்றால் அந்த அரசு யாருக்கான அரசு ?

அந்த ஆசிரியர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்… … !! இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த மாணவர்களுக்கு இது போல பாடத்திட்டம் வழங்காமல் இருந்தால், மீதம் உள்ள காலத்துக்குள் அத்தனைப் பாடப்பகுதியையும் எப்படி முடிப்பார்கள் ? அவசர கோலத்தில் பாடப்பகுதிகள் முடிக்கப் படும் அல்லது, மாணவர்களின் விளையாடும் நேரம் பறிக்கப் பட்டு, அந்த நேரத்தில் பாடம் எடுக்கப் படும். எப்படி இருந்தாலும் இழப்பு மாணவர்களுக்குத் தானே ? இதனால் மாணவர்ளுக்கு ஏற்படும் கடும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பாக முடியும் ?
 31812484
மேலும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போதே, தமிழக அரசு, புதிய பாடப்புத்தகங்களை அச்சடித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறு பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் செயலே, தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து செயல்பட்டதைக் காட்டியது.

சமச்சீர் கல்விக்காக அச்சடிக்கப் பட்ட பாடப்புத்தகங்களுக்கு ஆன செலவு ஒரு புறம் இருக்கட்டும். சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டேன் என்று தமிழக அரசின் சார்பில் வாதாட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடிய பி.பி.ராவுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் வாதாடினால் 5 லட்ச ரூபாய் பீஸ்.   இது போக அவருக்கு சென்னைக்கு வருவதற்கு, முதல் வகுப்பில் விமான டிக்கெட், அவர் ஜுனியருக்கும் முதல் வகுப்பில் விமான டிக்கெட், சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கான அறை என்பது போன்ற விவகாரங்களுக்கு ஆகும் செலவுகளும் மக்களின் வரிப்பணம் தானே.. ?

தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் அடங்கிய குழு, தற்போது டெல்லி சென்றிருப்பதும், மக்களின் வரிப்பணத்தில் தானே ? இவர்களுக்கு ஆகும் குறைந்த பட்ச செலவான 30 லட்ச ரூபாயும் மக்கள் வரிப்பணம் தானே ?

தமிழகத்தின் உரிமையை காவிரி நடுவர் மன்றத்தில் நிலைநாட்ட வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் பீஸ் கேட்கும் வழக்கறிஞரைக் கூட அமர்த்தலாம்.   ஆனால், தற்போது தமிழக அரசு செய்யும் இந்த தண்டச் செலவு, ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட்டில் இருக்கையில் ஏற்படும் கூடுதல் தண்டச் செலவு தானே….     இத்தகைய செலவுகளை வறட்டுப் பிடிவாதத்திற்காக தமிழக அரசு செய்கிறதென்றால், தமிழனுக்கு என்றுமே விடிவு காலம் கிடையாதா என்று தலையில் அடித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

கூட்டணிக் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் ஒரே குரலில் மேல் முறையீடு செய்யாதீர்கள் என்று குரல் கொடுத்து விட்டார்கள்.   சட்டக் கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் என்று மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தி விட்டன.   தினமணி நாளேடு தலையங்கம் எழுதியது. ஊடகங்கள் குரல் கொடுத்தன.

பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், தமிழக அரசின் தேவையற்ற வழக்கு காரணமாக, கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்குக் காரணம், வறட்டுப் பிடிவாதமாக இல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும்.

அய்யன் வள்ளுவனின் வாக்கை ஜெயலலிதா படித்திருப்பாரா என்று தெரியவில்லை. இருந்தாலும், அவருக்கு அதைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.