நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, February 22, 2011

தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு அன்று முதல்-இன்று வரை...

அருமையான விளக்கங்களுடன் விரிவாக விளக்கம் தந்துள்ள திரு அருள் அவர்களின் வலைத்தள பதிவு இது..


விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!


(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்."" 

--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.

"ராமதாஸின் அவதாரங்கள்" என்று விமர்சிக்கிறார் ஓசை.

"இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க" என்று கொச்சையாக விமர்சிக்கிறார் சவுக்கு. 

இப்படி வரும் விமர்சனங்களும் அவற்றில் வெளியிடப்படும் கேவலமான பின்னூட்டங்களும் பா.ம.க'வை வேண்டுமென்றே இழிவு படுத்துகின்றன.

இத்தகைய பதிவுகளைவிட ஒருபடி மேலாக - தமிழக பத்திரிகைகள் திட்டமிட்டு பா.ம.க மீது அவதூறு சாக்கடையை அள்ளி வீசுகின்றன?

பா.ம.க'வை தூற்றுவது நியாயம் தானா?காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.

அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை. எடுத்துக்காட்டாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியன இப்போது திமுக அணியில் உள்ளன. அவ்வாறே, திமுக அணியில் இருந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி ஆகியன அதிமுக அணியில் உள்ளன.

இது மட்டுமின்றி - எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்.

தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு

முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952

தி.மு.க போட்டியிடவில்லை.  காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.

காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.

தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.

(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)


இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.


மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.


நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967

தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

CPI தனித்து போட்டியிட்டது.


ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971

தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.


ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977

தி.மு.க தனித்து போட்டி.

அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.

இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,

சனதா கட்சி தனித்து போட்டி.


ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980

தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.


எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.


ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989

அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.

தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.


பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991

அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.

பா.ம.க தனித்து போட்டி.


பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996

தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.

ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.

பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.


பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001

அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.


பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006

தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.

--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.


ஆக, எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் இடம் மாறுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

Monday, February 21, 2011

கலைஞர் கருணாநிதி,ஸ்டாலினை சாந்தித்தார் மேனாள் நடுவண் அமைச்சர் மருத்துவர் அன்புமணி அய்யா..







கலைஞரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் கூறியது

பிபரவரி 21-2-11 காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.

இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

Friday, February 18, 2011

பாமக கூட்டணியால் திமுகவிற்க்கு 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி...




சென்னையில் பிப்ரவரி 18 ல் தமிழக முதல்வரை சந்தித்த மருத்துவர் அய்யா அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.என சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அவருடன் கட்சித் தலைவர் ஜி.கே. மணியும் சென்றார். நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.


 காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

 சந்திப்புக்குப் பிறகு, தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.


 இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியது:

 தில்லிக்கு நான் சென்றிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தேன். அப்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.


 அதன் தொடர்ச்சியாக, இப்போது பா.ம.க.வுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்தத் தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பா.ம.க. போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.


 அதன்பிறகு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 என் பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு வந்தேன். அதோடு சேர்த்து தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். மகிழ்ச்சியோடு கருணாநிதியைச் சந்திக்கச் சென்றேன். மகிழ்ச்சியோடு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

 பா.ம.க.வுக்கு 31 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இரு கட்சிகளின் தேர்தல் குழுக்கள் கூடி முடிவு செய்யும்.


 திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த நான், இந்த தேர்தல் உடன்பாட்டையும் எதிர்பார்த்துதான் வந்தேன்.


 வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைத் தவிர, மேலும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

 தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெறுவதற்கான பா.ம.க.வின் பேரம் பேசும் திறன் குறையவும் இல்லை, கூடவும் இல்லை என்றார் ராமதாஸ்.

 சோனியாவைச் சந்திப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி, சோனியாவைச் சந்தித்து உள்ளார் என்றார் ராமதாஸ். கடந்த பேரவைத் தேர்தலில் இதே எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்றபோது, தொகுதிகளை அள்ளியும் கொடுக்கவில்லை - கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொன்னீர்கள். இப்போதும் அதே அளவுக்குதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறீர்களே என்று கேட்டபோது, இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் ராமதாஸ்.



பேரவைத் தேர்தலில்  இதுவரை பா.ம.க.உள்ள அணியே வெற்றி பெற்றுள்ளது.



 1991 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

1996 பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது.


 2001 பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் சேர்ந்த பா.ம.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க., 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது.


இப்போது மீண்டும் 2011 -ல் தி.மு.க. அணியில் இடம்பெறும் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Thursday, February 17, 2011

காங்கிரசு கூட்டணியில் பாமகவை சேர்க்க திருமதி சோனிய, பிரதமர் மன்மோகன்சிங் தீவிர முயற்ச்சி..

சோனியகாந்தியை சந்தித்தார் மேனாள் நடுவண் அமைச்சர் திரு அன்புமணி இராமதாசு..

 


புது தில்லியில் 17-2-11 அன்று  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை,  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்தார்.
 
இதனால் தமிழக கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், . பிரதமர் மன்மோகன் சிங்கையும் திருமதி சோனியவையும் நேரில் சந்தித்தார் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள்
 
 மருத்துவர் அன்புமணியை நடுவண் நல்வாழ்வு துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தே நேரில் அழைத்துச் சென்றதற்கு 2 காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
ஒன்று, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதை சோனியா விரும்பவில்லை என்ற கருத்தைப் திமுக வேண்டுமென்றே காங்கிரசு மீது பழிபோடுகிறது என்பதைதெளிவாக கூறியதாகவும் தெரிகிறது.
.
 மத்திய சுகாதார அமைச்சராக மீண்டும் அன்புமணியே நியமிக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டணிக்கு குலாம் நபி ஆசாத்தே தடையாக இருக்கிறார் என்ற கருத்தைப் போக்கவுமே அவர் அன்புமணியை நேரில் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
 இதன்மூலம், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதை தான் ஊக்குவிப்பது போன்ற கருத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் குலாம் நபி ஆசாத்தின் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்வதை காங்கிரஸ் வரவேற்பதாகக் கூறினார்.
 
 கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடனான பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்பான தெளிவின்மையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 
பாமக உள்ள அணியே பல ஆண்டுகளாய் வெற்றிபெருவதையும்.கடந்த நாடளுமன்ற தோ்தலில் பாமக வை வீழ்த்த பல கோடி செலவு செய்து திமுக பாமகவை வீழ்த்தியது. நாம் தொடந்து வெற்றிபெற வேண்டுமானல்
பாமக தயவு நமக்கு தேவை என்பதை காங்கிரசார் அனைவரும் விருப்புவாதாக சோனியவிடம் தங்கபாலு கூறியுள்ளார்.
 
 
அதன்காரணமாகவே, இந்தக் கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பதற்குக் காங்கிரஸ் தரப்பில் ஆர்வம் காட்டப்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
 
காலங்கள் மாறுகின்றன..
காட்சிகளும் மாறுகின்றன..

Monday, February 14, 2011

எங்கள் ஆசிரியர்..! மருத்துவர் அய்யா.....


எங்கள் ஆசிரியர்..! மருத்துவர் அய்யா.....

அகர முதல சொல்லித்  தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் மருத்துவரே...


ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!

இனிய தமிழ் பயிற்றுவித்த  எங்கள் ஆசிரியையே...
இ
னிய நம் இனத்தின் பெருமையை சொல்லித்தந்த  எங்கள் மருத்துவரே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!

உலக மொழியை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் மருத்துவர் சின்னவரே...

ஊர் கேட்க  சொல்லிடுவோம்  உங்கள் பெருமையையே..!

எம் இன வரலாற்றை கற்றளித்த எங்கள் மாவீரனே...எளிமைதனை எமக்களித்த எங்கள் பெண்குல மாணிக்கமே...

ஏற்றிடுவோம் உம் புகழை உலக ஏட்டினிலே..!

ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் மருத்துவரே...

ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!

ஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியரே...ஓர்குலம் நாமெல்லாம்  என்றுரைத்த எங்கள் மாவீரனே...

ஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!

எஃகு போல் திடம் கொண்டோம் உம் அரசியலால்..

(எ)ஃகணமும் மனதில் ஏந்தி நிற்போம் உந்தன் கொள்கைகளை..!
மருத்துவர் அய்யாவழிநடப்போம்....
மனுடத்தை காத்து நிற்போம்....

Wednesday, February 9, 2011

வரமா,சாபமா மரபணுமாற்றபட்ட உணவு பொருட்கள்....?





தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதனின் வளர்நிலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தொழில் நுட்பம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் தொடங்குகின்றது. இதனை மேற்கொள்ளும் அறிவியலார் குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணைப் போன்றவர்கள்; நிறைய எதிர்பார்ப்பும் அதைவிட நிறையக் கவலையையும் சுமக்கின்றார்கள். குழந்தை எப்பொழுது பிறக்கும் ? அது என்ன பண்புகளைக் கொண்டிருக்கும், அதன் நிறம் என்னவாயிருக்கும் - என்பதைப் போன்ற ஆர்வமும் அதனையும் விழுங்குமளவிற்கு அக்குழந்தை நல்லபடியாகப் பிறக்குமா என்பதைப் போன்ற கவலைகளும் அவர்கள் உள்ளத்தை நிறைத்திருக்கும். புதுக்குழந்தையாக அறிவியல் கண்டுபிடிப்பு வெளிவந்தவுடன் எல்லார் கவனமும் அதன் மேல். அதற்குப் பெயரிடுதலும் காண்பவர் எல்லாரிடமும் தன் கண்டுபிடிப்பைக் காட்டி மகிழ்தலுமாக ஒரே மகிழ்ச்சி வெள்ளந்தான். சில நாட்களில் பள்ளிக் குழந்தையைப் போல் அறிவியல் கண்டுபிடிப்பும் பத்தோடு ஒன்றாகி மறக்கப் படுகின்றது. பின்னர் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சியால் அது மெல்ல வளரத் தொடங்குகின்றது. மனித வாழ்வைப்போலவே அறிவியலிலும் விடலைப் பருவம் உண்டு, அது சிறுவனாயிருக்கும் அறிவியல் பிறருக்குப் பயனளிக்கக் கூடிய மனிதனாய் - தொழில்நுட்பமாய் - முதிர்ச்சியடையும் தருனம். அக்கட்டத்தில் அது வளர்ச்சிக்கான வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து நல்ல தொழில்நுட்பமாக,. இளைஞர்களைப் போல சமுதாயத்திற்கு பயன்படும் துடிப்புகொண்டாதாக, மாறுகின்றது. பின்னர், வயோதிகனாகப் பரிணமிக்கிறது, முதிர்காலத்தில் தன் அனுபவத்தால் பிறருக்கு அறிவூட்டும் மூதறிஞன் போல இன்றைக்கு கணிதத்தைக் கூறலாம். இளைஞனாகத் திகழ்பவை நிறைய நம்மில் உண்டு - உதாரணமாக குறைகடத்தித் தொழில்நுட்பம் (semiconductor technology), நோய்த்தடுப்புத் தொழில்நுட்பம் (immunization) , அறுவை சிகிச்சை (surgery), இவற்றைக் காட்டலாம்.

இவை எல்லாவற்றையும் விட சுவையான பருவம் - விடலை. இக்கால கட்டத்தில்தான் எத்தனை விரைவான மாற்றங்கள் - தன்னைத் தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியமை, பிறரிலிருந்து தன்னை மாறுபட்டவனாகக் காட்டிக்கொள்ளுதல், மற்ற வளர்வனவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஆர்வம் - அப்பப்பா, அதுதான் எத்தனைச் சுவையானது. இன்று இத்தகைய நிலையில் இருப்பவையாக நிறைய உள்ளன - மரபு மருத்துவம் (gene therapy), மின்வனிகம் (e-commerce), வானிலை ஆராய்ச்சி (weather prediction), சூழியல் (ecology) ஆய்வுகள், ... இவை தங்களுக்கே உரித்தான விரைவில் மாறும், முதிர்ச்சியடையும் திறனால் பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. இத்தகைய விடலைத் தொழில்நுட்பங்களுள் ஒன்று மரபு மாற்றப்பட்ட உணவுகள் (Genetically Modified Foods, GM Foods), இதற்குத்தான் எத்தனை எதிர்ப்பு. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள வகுத்துவரும் இன்னொரு ஆயுதமா ? இது சூழலுடன் இயைந்து மாறாமல் தன்னிலையாக மாறுவதால் சூழலைச் சிதைக்க வல்லதா ? இது பணமுதலைகளான பன்னாட்டு நிறுவனங்களின் முற்றிலுமான வியாபார தந்திரமா ? இதற்குத்தான் எத்தனை ஆதரவும் எதிர்பார்ப்பும் - நாம் உண்ணும் உணவுகளையும் அதன் சுவையையும் திறனையும் உயர்த்த வந்ததா ? கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்திற்கு உணவளிக்க வல்ல ஒரே வரப்பிரசாதமா ?

தாவரங்களின் தன்மை மாற்றுதல் இன்று நேற்றாக நடந்துவரும் செயலல்ல. இது எப்பொழுது தோன்றியது என்று யாராலும் அறுதியிடமுடியாது. ஒட்டுமாங்கன்றுகளும், பலவண்ண ரோஜாச் செடிகளும் மனிதனால் வடிவமைக்கப் பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். உணவு அறிவியலாளர் டாக்டர் மா. சாம்பசிவம் சுவாமிநாதனின் அயராத முயற்சியால் இந்தியாவிலும் அதைத் தொடர்ந்து சினா முதல் பிலிப்பைன்ஸ் வரை நிகழ்ந்த பசுமைப் புரட்சி அற்புதங்களையும் நாம் அறிவோம். இது எல்லோராலும் எளிதில் உணரப்பட்டது - ஏற்றுக்கொள்ளப் பட்டது. இது தாவர ஒட்டு வளர்ச்சி எனப்படுவது. உயர்குணங்களைக் கொண்ட, சுவையான மாம்பழத்தை அதன் உற்பத்தித் திறனைப் பெருக்க, சுவையற்ற நாரைக்கொண்ட ஆனால் அதிக அளவில் காய்க்கவல்ல நாட்டுப்பழங்களுடன் ஒட்டுப் போட்டு அதன்மூலம் தரமான பழங்களின் உற்பத்தியைப் பெருக்குதல் என்பது நாம் நன்றாக அறிந்ததே.

உயிரிகளின் குணங்களும் தன்மைகளும் அதன் மரபுக்கூறான டி.என்.ஏ எனும் மூலக்கூறினால் நிர்வகிக்கப்படுகின்றது. டி.என்.ஏ, ஒரு நீளமான வாக்கியத்தைப் போன்றது. உதாரணமாக, நெல்மணியின் நீளம் அதன் டி.என்.ஏயின் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரால் நிர்வகிக்கப் படுகின்றது. இந்த சொற்றொடரை மாற்றி மணிநீளத்தைத் திருத்தியமைக்க இயலும். முன் பத்தியில் சொன்ன தாவர ஒட்டுப் பெருக்கத்திலும் இதுதான் நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதானது, ஒட்டுப் பெருக்கத்தில் விளையும் செடியின் பிற பன்புகளை நம்மால் ஊகிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மரபு மாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறியாகக் கொண்டு அதற்கான டி.என்.ஏ பகுதியை மாற்றியமைக்க இயலும். உயிர்தொழில்நுட்ப (biotechnology) வளர்ச்சியாலும் மூலக்கூறு உயிரியல் (molecular biology) முன்னேற்றங்களாலும் இத்தகையை அடிப்படை ஆய்வுகள் இப்பொழுது ஏதுவாகியுள்ளன.

அறிவியல் முறை

இது எவ்வாறு நிகழ்த்தப் படுகின்றது ? முதலில் தொழில்நுட்பவியலார் ஒரு குறிப்பிட்ட பன்பினை இலக்காக கொள்வார்கள். உதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி எனக் கொள்வோம். இதனை நிர்வகிக்கும் டி.என்.ஏ பகுதியை ஆராய்ந்து தெளிவர், இதன் பின் என்ஸைம்கள் எனப்படும் வேதிக்கலவையால் இப்பகுதியை 'வெட்டி ' எடுப்பார்கள். பின்னர் வேறு சில வேதிப்பொருள்களால் பிற உயிரி (தாவரமோ, விலங்கோ) யிலிருந்து எடுக்கப்பட்ட உயர்குண டி.என்.ஏ பகுதியை (இதுவும் ஒரு வேதிக்கலவையே) 'ஒட்டுவார்கள் '. பொதுவில் சேர்க்கப்படும் கலவை, சேருமிடத்திற்கு வேதியிணையாக (chemical pair) இருக்கும், இதனால் இவற்றின் சேர்க்கை உறுதியாகும். இதனை மேலும் நிச்சயிக்க சில என்ஸைம்களைச் சேர்ப்பார்கள்.

இதன்பின்னர் நடைபெற வேண்டியவை எல்லாம் வழக்கமான ஆய்வக மற்றும் நடைமுறை சோதனைகள். உருவாகும் தாவரத்தினைப் பெருக்குவார்கள், அதன் பல்வேறு குணங்களை ஆராய்வார்கள்; குறிப்பாக இலக்காக்கப்பட்ட பன்பின் மாற்றத்தை நன்றாக சோதிப்பார்கள். பின்னர் இச்சோதனையால் பிற பண்புகள் மாற்றமடைந்திருந்தால் அவற்றினை உணர்வார்கள். அதன்மூலம் ஏற்படக்கூடிய குறுகியகால மற்றும் நீண்ட கால விளைவுகளை ஆராய்வார்கள்.

ஏற்கனவே விற்பனையாகும் மாற்றப்பட்ட உணவுகள்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வசிப்பவரென்றால் உங்களை அறியாமலேயே இந்த உணவு வகைகளை நீங்கள் முன்னரே உட்கொண்டிருக்க 80% சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ வசிப்பவரென்றால் இந்த சதவிதம் மிகவும் குறைவு; ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

உணவுப் பொருள் - மாற்றப்பட்ட குணாதிசயங்கள்

தக்காளி - கெட்டியான தன்மை, அதிக சத்துப் பொருட்கள், நாட்பட சேமிக்கும் திறன்
உருளைக்கிழங்கு - நோய் எதிர்ப்புத்தன்மை
சோளம் - பூச்சிக்கொல்லியால் பாதிக்கப் படாமை
சோயா மொச்சை - களைக்கொல்லி எதிர்ப்புத்திறன்
கனோலா - நோய் தடுப்புத் திறன்

அமெரிக்க அரசாங்கத்தின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளின்படி இத்தகையப் பொருட்களின் விற்பனைப் பெட்டியில் இவை 'மரபு மாற்றப்பட்ட உணவுகள் ' எனப் பொறிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இத்தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புமிகுந்த ஐரோப்பிய சமுதாய நாடுகளில், குறிப்பாக, பிரிட்டனில் இன்னும் கடுமையானவை. ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு தாவரமுமாக வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்பத்தினால் விரைவில் இவைகளுக்கும் வழக்கமான உணவுப் பொருட்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகக்கூடும். தக்காளியில் வேண்டுமானால் பொறிக்கலாம், தக்காளி கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளிலும், பாஸ்டா கலவைகளிலும் சற்றே கவனமாக இருந்து இவ்விதி கடைபிடிக்கப்படுகின்றதா என நோட்டமிடலாம். ஆனால், ஆயத்த உணவுக் கடைகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வறுவலிலும், அதனுடன் வினியோகிக்கப்படும் தக்காளிக் கலவையிலும் எந்தவகையான தாவரம் பயன்படுத்தப்பட்டது எனக் கண்காணிப்பது மிகவும் கடினம். இதற்கான விதிமுறைகளை அரசாங்கங்கள் வகுக்கும்பொழுது, மொன்ஸான்டோ, கால்ஜீன் போன்ற பன்னாட்டு உயிர்தொழில் நுட்ப நிறுவனங்களும், அதனை பெருமளவில் பயன்படுத்தும் கெல்லாக்ஸ், நெஸ்லே, மக்டொனால்ட் போன்ற உணவுத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் அவர்களின் வணிக சாத்தியக்கூறுகளைப் பாதிப்பதாக பெரும் கூக்குரல் எழுகின்றது. ஒருவிதத்தில் இதற்கும் நியாயம் உள்ளது, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தாவர மற்றும் விலங்கு உணவுகளில் 95% க்கும் மேற்பட்டவை ஒட்டுப்போடுதல், மட்டும் தீவிர இனக்கலப்பு செய்தலால் மாற்றப்பட்டவையே, இவற்றைப்பற்றி நாம் கவலைப் படுவதில்லை. நம்மூர் பொன்னி அரிசி மூட்டையில் 'இது பல்வேறு அரிசித்தாவரங்களை செயற்கை முறையில் ஒட்டி, இனப்பெருக்கம் செய்து உருவாக்கப் பட்டது ' - என ஒருக்காலும் பொறிக்கப்படுதில்லை.

இதற்கு எதிர்ப்பு ஏன் ?

இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றார்கள்:

1. சூழலிலின் ஒரு கூறினை அதற்கு முற்றிலும் ஒவ்வாதவகையில் உடனடிமாற்றம் செய்வதால் சூழல் பாதிக்கப்படுகின்றது.

உதாரணமாக, பூச்சிக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக உருவாக்கப்படும் சூரியகாந்திப்பூவில் வழக்கமாக அதில் தேனருந்தும் வண்டு அதற்குப் போதிய தேன் கிடைக்காததாலோ, அத்தேனின் சுவை குறைவாலோ அதனை விரும்பாமல் போகக்கூடும். நாளடைவில் போதிய உணவின்றி அவ்வண்டினம் அழியக்கூடும். அவ்வண்டின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை கொள்ளும் வேறு தாவரங்களும் அழியக்கூடும். இச்சங்கிலி தொடர்ந்து சூழல் பெரிதும் மாற்றியமைக்கப்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள் தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

2. சூழல் பன்முகம் பாதிக்கப்படும். உதாரணமாக, களைக்கொல்லி எதிர்ப்பு சக்தி மிக்க கோதுமை பயிரிடப்படுவதால் விவசாயிகள் அளவுக்கு அதிகமான களைக்கொல்லிகளை பயன்படுத்தத் துவங்குவார்கள். இது களைகளை முற்றிலுமாக அழிக்கும். எல்லா களைகளும் உபயோகமற்றவை எனக் கருதுவது தவறு. உதாரணமாக கிளைபோஸேட் எனும் களைக்கொல்லி அழிக்கும் களைகளில் சில மண்ணில் நுண்ணுயிரிகள் வளர உதவி செய்கின்றன. இந் நுண்ணுயிரிகள் நைட்ரஜன் எனும் வளியை மண்ணில் நிலைப்படுத்துகின்றன; மண்ணில் நைட்ரஜன் இருத்தல் பல வழிகளில் தாவரங்களுக்கு இன்றியமையாதது. களைகளை முற்றிலுமாக அழித்தலின் மூலம், களைகள் மற்றுமின்றி இதர தாவர வளர்ச்சியையும் பாதிக்கின்றது.

இது தவிர, உயர் இரகத் தாவரங்களை மாத்திரமே பயிரிடுவதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் பல்வேறு இனங்கள் அருகிவிட வாய்ப்பிருக்கின்றது. பூவன், தேன்கதளி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, சிறுமலைப்பழம், செவ்வாழை, மொந்தன், பேயன் என்று ஒருகாலத்தில் விதவிதமாக விளைந்த காவிரிக் கரைகளில் இன்று மொரிஷியஸ் ரொபஸ்டா எனும் பச்சைப் பழம் ஒன்றே பயிரிடப்படுகின்றது, இது நோய் எதிர்ப்புமிக்க, குறுகிய காலத்தில் முதிரக்கூடிய தீவிர ஒட்டு இனமாகும். இதுமாத்திரமே ஆதாயம் கருதி விளைக்கப் படுவதால் வாழையின் பல்வேறு சுவைமிகுந்த இரகங்களை நாம் இழந்து வருவது கண்கூடு. இதைவிட உயிர்தொழில் நுட்பத்தில் கண்டுபிடிக்கக்கூடிய ஒருசில தானியங்களும் தாவரங்களும் பன்மடங்கு விரைவில் மற்றவற்றை நாம் முற்றிலுமாக மறந்துவிடச் செய்யக்கூடிவை


2. மனிதர்களுக்கு உயிரிகளை மாற்றும் உரிமையில்லை. - இது சமூக, சமயம் சார்ந்த கொள்கையாகும். இத்தகைய குற்றச்சாட்டைப் பொதுவில் அனைத்து அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்வைக்கலாம்.

3. எல்லா விளைபொருட்களும் போதுமான அளவிற்கு ஆய்வக மற்றும் களச்சோதனைக்கு உட்படுத்தப் படவேண்டும். இவற்றால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த ஒரு தீங்கும் இல்லை என்பது அறுதியிடப்பட வேண்டும். - இதில் போதுமான என்பதன் வரையறை அவ்வளவு எளிதான காரியமல்ல. இதுதவிர இன்றைக்கு தாவர உயிர்த்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முன்னனி அறிவியலாளர்களில் 80 சதவீதத்தினர் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் மானியம் பெற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்கள். இவர்களின் ஆய்வகச் சோதனைகள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதிலும் ஐயப்பாடுள்ளது.

4. இதனால் விளையக்கூடிய சமூக, பொருளாதார மாறுபாடுகள் நிச்சயிக்கப் படவில்லை - பெரும்பாலான தொழில்நுட்பங்கள் முன்னேறிய நாடுகளிலேயே உருவாக்கப் படுகின்றன. இவற்றுடன் அவற்றின் வணிக, மற்றும் அரசியல் ஆதிக்கச் சாத்தியக்கூறுகள் இணைந்தே உள்ளன.

உதாரணமாக, மொன்ஸான்டோ நிறுவனத்தின் ஒரு கண்டுபிடிப்பின்படி, மரபு மாற்றப்பட்ட, உயர்குணங்கள் கொண்ட, தானிய வகைகளின் விதைமணிகளை அவர்கள் விற்கின்றார்கள். இவற்றில் 'இறுக்கும் மரபணுக்கள் ' (terminator genes) அடங்கியுள்ளன. இதன்படி ஒருமுறை விதைத்து விளைந்ததும் அப்பயிரின் உயர்குணங்கள் அடுத்த பட்டத்திற்கும் தொடர்ந்து வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், உங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து நீங்கள் விதைநெல் திரட்ட முடியாது; அவ்வாறு திரட்டப்பட்ட விதைகள் விளையாது அல்லது அவற்றின் தரம் முதல் தலைமுறை (விதை நேரடியாக வாங்கப்பட்டது) பயிரைப்போல உயர்ந்ததாக இருக்காது. இந்த இறுக்கும் மரபணுக்கள் முதல் விளைச்சலிலேய அவற்றின் பண்புகளை மாற்றிக்கொள்ளத் தெரிந்தவை. இதன்மூலம் தொடர்ச்சியாக நீங்கள் மொன்ஸான்டோவிடமே விதை வாங்குவது உறுதி செய்யப்படும்.

5. அறிவியல் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெற்றவை. இதன்மூலம் நிறுவனங்கள் 'உயிருக்கு உரிமை ' பெறும் அபாயம் இருக்கின்றது.

இதனால் என்ன பயன்கள் ?

உலகின் மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏழை நாடுகளில் வசிப்பவர்களே. இதில் கனிசமான பங்கினர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளனர். இந்நாடுகளின் நிலங்களில் பெரும்பங்கு பயிரிடப்படுவதில்லை அல்லது பயிரிடுவதற்கு ஏற்றதல்ல. தரமான உணவுப்பயிர்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யமுடியுமென்றால் இவற்றின் பஞ்சம் தீருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இன்னும் தீவிரமாகச் சொல்லப்போனால் உயிர்தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் புரட்சிகரமான கருவிகள் இல்லாமல், மக்கள் வெள்ளத்தின் இந்த பெரும்பங்கிற்குப் பசி தீர்ப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கடந்த சில ஆண்டுகளாக உலகில் சிசுச்சாக்காடு (infact mortality) அதிகரித்து வருகின்றது (குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கா), இது அரைநூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான ஆரோக்கிய நிலைக்குத் தலைகீழாக உள்ளது - பெரிதும் கவலையைத் தரக்கூடியது. சமீபத்திய ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவை தர்மசங்கடமான நிலையில் காட்டுகின்றது - இந்தியக் குழந்தைகளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சத்துணவு அளவினைப் பெறுவதில்லை. இது தவிர பெருகிவரும் இயற்கையின் சீற்றத்தாலும் வழக்கமான பயிர்முறைகள் பலனில்லாமல் போய்வருகின்றன. இந்நிலையில் வளர்ந்துவரும் நாடுகளுக்கு உயிர்த்தொழில் நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் நிலவரம் மிகவும் அற்புதமாக உள்ளது. உலகில் நீரும், விளைநிலமும் உயரப்போவதில்லை, இந்நிலையில் மும்மடங்கு விளைச்சளைத் தரவல்ல புதிய இரகங்கள் உலகின் பசிதீர்க்க இன்றியமையாததாகின்றன. இருக்கும் விளைநிலத்தை முற்றிலுமாகப் பயன்படுத்துவதன் மூலம் காடுகளை அழித்து விளைநிலமாக்களைத் தடுக்கலாம்; இது உயிர்பன்முகத்தை (biodiversity) நிலைசெய்யும். குறுகியகால அறுவடையை உறுதிசெய்வதன் மூலம் கட்டுக்கடங்காது தப்பிவரும் பருவங்களைப் பற்றிய கவலையைக் குறைத்துக் கொள்ளலாம். வளரும் பயிர்களை மேலும் சுவையானதாகவும் சத்துள்ளதாகவும் மாற்றுவதன் மூலம் உலகின் உணவுத்தேவையை எளிதில் நிறைவேற்றலாம். சேமிப்புத்திறனைப் பெருக்குதல் மூலம் தேவையான நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம். குறைந்த பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான விவசாய முறைகளுக்கு மாறாலாம். தங்கள் முன் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இந்நிறுவனங்கள் அநேகமாகச் சரிவர பதிலளிக்கின்றன, முடியாத இடங்களில் பதிலற்ற எதிர்கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணமாக, 'உயிரிகளை மாற்றும் உரிமை மனிதனுக்குக் கிடையாது ' எனும் சமயநெறி சார்ந்த கடுமையான வாதத்திற்கு, 'நீங்கள் உட்கொள்ளும் உணவுவகையில் மனிதானால் ஒருபொழுதும் மாற்றியமைக்கப்படாத தானியங்களோ, பழவகைகளோ என்னவிருக்கிறது எனக்காட்டுங்கள் ' என்று கேட்கின்றார்கள்.

உண்மை நிலை

ஆனால் உண்மை நிலை வேறுவிதமாகக் காட்சியளிக்கின்றது. களைக்கொல்லி எதிர்ப்புதிறன் தம் தாவரங்களுக்கு உண்டென்பதால் அதிகக் களைக்கொல்லியைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்க முயலுகின்றனர். உலகின் பெரும்பகுதிக் காடுகளும், பன்முகம் கொண்ட சூழலும் பெரிதும் வளரும் நாடுகளிலேயே உள்ளன (உதாரணத்திற்கு பரப்பளவில் குறைந்த இந்தியாவின் தாவர மற்றும் விலங்குப் பன்முகத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரீன்பீஸ் எனும் தன்னார்வ சூழியல் பாதுகாப்புக் குழுவின் அறிக்கைப்படி இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன, அல்லது ஒருகாலத்தில் பயிரிடப்பட்டன). பன்முகப் பாதுகாப்பு எனும் பெயரில் பயிரிடும் உரிமையையும் திறமையையும் தமக்குள்ளே பங்கிட்டு குழுவுரிமையாக்க முயற்சி செய்கின்றன. மாற்றியமைக்கப்பட்ட தாவரங்கள் முற்றிலும் எக்காலத்திலும் சிறந்ததாக விளங்கும் எனச் சொல்லுவதற்கில்லை. உதாரணமாக பசுமைப்புரட்சி காலத்தில் நெல்லைப் பாதிக்கும் எட்டு முக்கியமான வியாதிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.ஆர்-36 எனும் நெல் வெளியிடப்பட்டது. விரைவிலேயே இதுவரை நெல்லைத் தாக்காத இரண்டு கிருமிகளால் பாதிக்கப்பட்டு அது குட்டையாகின்றது எனத் தெரியவந்தது.

மனிதனால் மாற்றப்படாத உணவுப்பொருளைக் காட்டச் சொல்லிக் கேட்கும் நிறுவனங்களின் வாதத்தில் ஒரு அடிப்படை முரண் பொதிந்துள்ளது. இதுவரை செயற்கையாகச் செய்யப்பட்டவை எல்லாம் மரபுத்தொடரில் மேலிருந்து கீழாகச் செய்யப்பட்டவை. இரண்டு பயிர்களை ஒட்டுவதன் பலன் அடுத்த தலைமுறையில் கிடைக்கும், அதன்பின் தலைமுறைகளில் அவை மரபுவிதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தொடரும். உயிர்தொழில் நுட்ப மாற்றங்கள் இவ்வாறில்லை. இது இணைக்கப்பட்ட உயிர் அந்த தலைமுறையிலேயே மாற்றம் காணும். இறுக்கும் மரபணு தொழில்நுட்பம் போன்றனவற்றால் அது அடுத்த தலைமுறைக்குத் தொடராது - ஆனால் நம்மால் ஊகிக்க முடியாத பிற பக்கவிளைவுகள் தொடரக்கூடும் - அவை சில தலைமுறைகளுக்குப் பின் முற்றிலும் அபாயகரமானவையாக மாறக்கூடும்.

இன்னமொரு முற்றிலும் புரட்சிகரமான, அபாயகரமான வேறுபாடும் உள்ளது. இதுவரைப் புழக்கத்திலிருக்கும் ஒட்டுதல் முறையில் மரபு சம்பந்தமுள்ள இரண்டு உயிரிகளையே இணைக்க முடியும் - உதாரணமா நெற்பயிருடன் மாங்கன்றை ஒட்டிட முடியாது. ஆனால் உயிர்தொழில் நுட்பத்தில் இது சாத்தியம், ஏன், இதற்கு ஒருபடி மேலேயே போய் தாவரங்களின் டி.என்.ஏ-வைப் பிளந்து அதில் மனித டி.என்.ஏ துண்டை ஒட்டிட இயலும். இதன்மூலம் எண்ணிப்பார்க்கவியலாத சாத்தியங்கள் புலப்படுகின்றன. விளையும் தாவரம் பலதலைமுறை இயற்கை மரபு மாற்றங்களுக்குப் பிறகு என்னவாக மாறும் என்பது யாராலும் ஊகிக்க முடியாதது.

கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட விடலைத் தொழில்நுட்பம் எனும் தொடருக்கு இப்பொழுது விளக்கம் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். உயிர்தொழில் நுட்ப வளர்ச்சியில் இது முக்கியமான கட்டமாகும் - நல்லனவாகவும் தீயனவாகவும் மாறுவது இந்தப் நிலையில்தான். இதில் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு வேதனையும் தவிர்க்க முடியாதவை. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு. பலசமயங்களில் நாம் ஆபத்தைத் தெளிந்து தவிர்க்கின்றோம். சிலசமயங்களில் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற விலைகளைக் கொடுத்து உண்மைகளை அறிந்து கொள்கின்றோம். எனினும் இயற்கையை அறியும் மனிதனின் அடிப்படை உணர்வுக்கு எப்பொழுது அழிவு கிடையாது. இது மனிதனுக்கும் இயற்கைக்குமான ஓட்டப்பந்தயம் எனக்கருதுவதைவிட மனிதனும் இயற்கையுமாக கால்களைப் பிணைத்துக்கொண்டு மூன்றுகால் ஓட்டம் ஓடுவதாகவே கொள்ளவேண்டும், மனிதன் வேகமாக ஓடினால் இயற்கை அவனைப் பின்னுக்கிழுக்கின்றது. சக்திமிக்க இயற்கை இழுக்கும் திசையில் அவன் செல்லாவிடில் அவனுக்கு கால்வலி நிச்சயம். எல்லா கட்டங்களிலும் இயற்கைக்கு எதிராக ஓடத்துவங்கினால் கால்வலி ஏற்பட்டு ஓட்டம் மட்டுப்படுத்தப்படுவது உறுதி.

உடல் பருமனும் உறவினர்களும்!

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் - என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் வரியை இன்று பலவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம். மகிழ்ச்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இன்று பலர், கவலைகள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம் என பாட தொடங்கியுள்ளனர் என்றே சொல்லலாம்.

நல்ல வேலை கிடைக்கவில்லையே, நன்றாக நடனமாட முடியவில்லையே, பெரிய வீடு கட்ட முடியவில்லையே, நல்ல சூழல் அமையவில்லையே என பல கவலைகள் மனிதனை ஆட்கொள்ள தொடங்கி விட்டன. கணிணி நுற்றாண்டு தொடங்கி விட்ட பிறகும் கவலைகள் பெருகி கொண்டுதான் இருக்கின்றனவே ஒழிய குறையவில்லை. நிரந்த மகிழ்ச்சியை தேடும் மக்களுக்கு நேர் எதிர் மாறாக கவலைகள் பல்வேறு கோணங்களில் வந்து கொண்டிருக்கிறன என்றால் மிகையாகாது.

உடல் பருமன் இன்று பலருக்கும் கவலையூட்டும் ஒன்றாகி விட்டது. இயந்திரங்கள், கணிணி மூலமே வேலைகளை செய்ய பழகி விட்ட பலருக்கு உடல் பருமன் இயல்பாகவே இணைந்து விடுகின்ற கவலையாக உள்ளது.


அளவாக உண்டுவிட்டு, ஓடி ஆடி வேலை செய்யாமல் இருந்தாலோ, வேர்வை சிந்தாமல் அமர்ந்து வேலை செய்தாலோ, அதிகமாக உணவு உண்டாலோ உடல் பருமன் ஏற்படும் என பலர் எண்ணுகின்றனர். உறவுகள் உடல் பருமனை உருவாக்கலாம் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

சமீபத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால் நாமும் உடல் பருமன் அடையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் பருமன் சமூக அளவில் மனிதர்களுக்கிடையில் பரவக்கூடியது என இவ்வாராய்ச்சி தெரிவித்துள்ளது. நமது அன்புக்குரியவர்கள் வெகு தொலைவில் இருந்தாலும் இக்கண்டுபிடிப்பு உண்மையாக இருக்கிறது என மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இவ்வாய்வு தெரிவிக்கின்றது. சமூக உறவு மரபணுக்களை காட்டிலும் அதிக, ஆச்சரியமான மாற்றத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது தெரிய வந்துள்ளது.

பாஸ்டன் நகரில் ஃபிரமிங்காம் பகுதியில் வாழும் மக்களின் மருத்துவ பதிவுகளை ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.


பங்கேற்றவர்களின் தொடர்பு தகவல்களை பயன்படுத்தி அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இவ்வாய்வில் கலந்து கொண்டோர் மொத்தம் 12, 067 பேர்.

நுறு மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற நண்பர்களும், உறவினர்களும், ஒருவரின் அடுத்த வீட்டில் வசிப்போரை போன்று பாதிப்பை ஏற்படுத்துவதை ஆய்வில் அறிந்து ஆச்சரியப்பட்டதாக சன் டிகோ (san Diego) கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் இணை ஆசிரியர் ஜேம்ஸ் ஃபௌலர் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் நண்பர் உடல் பருமன் உடையவராக இருந்தால் 57 விழுக்காட்டினரும், உடன்பிறந்தவர்கள் உடல் பருமன் உடையவர்களாக இருந்தால் 40 விழுக்காட்டினரும் துணைவர் அல்லது துணைவியார் உடல் பருமன் உடையவராக இருந்தால் 37 விழுக்காட்டினரும் உடல் பருமன் அடைய வாய்ப்புகள் உள்ளது என இவ்வாய்வு தெரிவித்துள்ளது.

ஒரே விதமான உணவு, உடல்பயிற்சி பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் மட்டுமே உடல் பருமன் அடைகிறார்கள் என்பதை விட உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எடுத்துக்காட்டாக85 கிலோ எடையுடன் கட்டான உடலமைப்பை கொண்டவர் ஒருவர். 65 கிலோ எடை, ஆனால் தொந்தியும், தொப்பையுமாய் மற்றவர். எடை 65 தானே.


அதனால் தான் பருமன் இல்லை என்று அவர் நினைக்க வாய்ப்புண்டு. மூன்றாமவர் 85 கிலோ எடையுடன் இருப்பவர். ஆனால், கட்டான உடல் இல்லை. கிட்டத்தட்ட மாமிச மலை போல். அவரும் எனக்கும் 85 கிலோ தானே முதலாமவரை போல. எனவே நான் பருமனில்லை என நினைக்கக்கூடும். இதைத்தான் உடல் பருமன் கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்னொருவரின் உடல் எடை அளவின் கருத்தை மாற்ற முடியும் என்கின்றனர். ஆனால்; உடல் பருமன் கொண்ட உறவினர்களையோ நண்பர்களையோ துண்டித்து விட வேண்டும் என ஆய்வாளர்கள்; கூறவில்லை.

உடல் பருமன் இன்று முக்கியமான உடல் நலக்குறைவு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 
உலகம் முழுவதும் வயதுக்கு வந்தோரில் 1.5 பில்லியன் பேர் அதிக எடை கொண்டவர்களாகவும் அதில் 40 மில்லியன் பேர் உடல் பருமன் உடையவர்களாகவும் உள்ளனர்
. மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அதிக எடைவுள்ளவர்களாகவோ அல்லது உடல் பருமன் உடையவர்களாகவோ உள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள பல ஆய்வுகள் உடல் பருமனுக்கும், மரபணுக்களுக்கும் இடையிலான தொடர்பு அல்லது கலோரி பயன்பாடு என்பதை பற்றியே இருந்து வந்துள்ளது. கட்டுபாடான நல்ல உணவு பழக்கம் மற்றும் உடல்பயிற்சிகள் மூலம் உடலைக்; கட்டுக்கோப்பாக வைத்திருத்தல் ஆகியவையே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இவ்வாய்வின் முடிவுகள் உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சை முறையில் புதிய பாதையை காட்டியுள்ளது எனலாம். உடல் பருமன் கொண்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அல்லாமல் குழுவாக சிகிச்சை அளிப்பதே சாலச் சிறந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்களாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியமும் தொடர்புடையது என ஹவார்டு சமூகவியலாளர் முனைவர் நிக்கோலாஸ் கிறிஸ்டாகிஸ் கூறுகிறார்.

ஆய்வுகள் பலவாக இருந்தாலும் உடல் பருமனைப் பற்றிய இவ்வாய்வு புதிய பார்வையை நமக்கு தருகிறது என்றே சொல்லாம். உடல் பருமனுக்கு பல காரணங்கள் இருந்தாலும் தொலைவில் உள்ள நண்பர்களும், உறவினர்களும் அடுத்த வீட்டு நபர்களை போன்று பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள் என்பது நமக்கு தெரிவிக்கப்படும் புதிய கருத்தாகும்.

உடல் பருமனை கொண்ட நண்பர்களையும், உறவினர்களையும் விட்டுவிடக்கூடாது என இயம்பும் இவ்வாய்வு பலரும் இணைந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை முறையை பரிந்துரைப்பதன்மூலம் பல பேர் உதவி பெறும் முயற்சியாகவும் பார்க்கலாம்.


இன்னும் ... அடிவயிற்றில் ஏற்படுகின்ற பருமன் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களோடு தொடர்புடையது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் இது உண்மை என்பதை 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்று எண்பித்துள்ளது.

மருத்துவ சிகிச்சைப்பெற்ற உள்ளுர்வாசிகள்40 விழுக்காடு ஆண் நோயாளிகளும், 42 விழுக்காடு பெண் நோயாளிகளும் அடிவயிற்றில்; பருமன் கொண்டவர்களாக உள்ளனர் என அறிவியல்பூர்வமான இவ்வாய்வு தெரிவித்துள்ளது.

அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பு, உடல் நலத்தை பாதிக்கக்கூடும் என ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவத்துறை தலைமை பேராசிரியர் லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறுகிறார்.

இவ்வகை கொழுப்பு, இன்சுலின் தடுப்பு, இரத்தக்குழாய் வீக்கம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் இரத்தம் கட்டுதல் ஆகியவற்றை உருவாக்குகின்ற, சைற்றோகினிஸ் (Cytokines) மற்றும் கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இவை அனைத்தும் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு இட்டுச்செல்லும் உயர் ஆபத்துக்களை கொண்டுள்ளது என லாவ் ச்சூ பாக் (Lau Chu Pak) கூறியுள்ளார்.
90 சென்டி மீட்டர் (35.4 inch) இடுப்பளவு கொண்ட சீன ஆண்களும், 80 சென்டி மீட்டர் (31.5 inch) இடுப்பளவுடைய சீன பெண்களும் உடல் பருமன் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.


உடல் பருமன் கொண்ட பெண்கள் பருமன் இல்லாதவர்களை விட 3.3 முறை அதிகமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும்;, 4 முறைக்கு அதிகமாக நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகளை கொண்டுள்ளனர்.

இன்று உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் விiயாட்டுக்கூடங்கள், காலை மற்றும் மாலை வேளையில் உடல் பயிற்சியில் மக்கள் காட்டும் அக்கறை அனைத்தும் உடலை கட்டுப்கோப்புக்குள் வைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளப்படும் முயற்சிகளாகும். 


அன்பான நேயர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் பருமன் இன்று பல்வேறு உடல் சிக்கல்களுக்கு காரணமாக அமைகிறது என்றால் அதனை களைவது தானே நமக்கு நல்லது.

வயதுக்கேற்ற கட்டுபாடான உடல் அமைப்பையும்,எடையையும் நீங்கள் கொண்டுள்ளீர்களா? பருமன் என உங்களை ஒதுக்க ஆளில்லை. கண்ணாடி முன்நின்று உங்களையே பார்த்து உங்கள் சட்டையின் கழுத்துப்பட்டையை அதாவது காலரை துக்கிவிட்டுக் கொள்ளுங்கள்.

Monday, February 7, 2011

இணையத்தில் தமிழ் இதழ்களை படிக்க...

வலை தமிழ் இதழ்களின் பட்டியல்





யு_டீயூப் விடியோக்களை உங்கள் மொபைல் போனுக்கு உகந்த 3gp,mp4,flv,hd,avi,போன்ற பார்மேட்டில் இலவசமாக டவுன்லோட் செய்ய


யு_டீயூப் விடியோக்களை தேட,உங்கள் மொபைல் போனுக்கு உகந்த 3gp,mp4,flv,hd,avi,போன்ற பார்மேட்டில் இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு நல்ல இணையதளம் மிகுந்த தேடலுக்குப்பின்….
உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனிலும் தேடலாம் டவுன்லோட் செய்யலாம்.
யு_டீயூப் விடியோக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

இலவசமாக பைல் சேமிப்பு ஐந்து ஜிபி வரை தரும் இணையதளம் ஒப்பன்டிரைவ்


இலவசமாக பைல் சேமிப்பு ஐந்து ஜிபி வரை தரும் இணையதளம் ஒப்பன்டிரைவ்

சற்றே மனதை குளிர்வியுங்கள் தமிழ் நகைச்சுவை துணுக்குகள்

மனதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்காலாம் அதனால்

சற்றே மனதை குளிர்வியுங்கள்

தமிழ் நகைச்சுவை துணுக்குகள்

தமிழ் தகவல் பட்டியல் தொகுப்பு..

Saturday, February 5, 2011

வாக்காளர் பட்டியலில் நம்மைபற்றிய விவரங்கள் சரிபார்க்க

நீங்கள் பணி(வேலை) காரணமாக வெளிநாட்டில் -வெளி ஊரில் வேலை செய்யலாம். உங்களுக்கான ஒட்டு உரிமை உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம்.நமக்கு ஒட்டு உள்ளதா - வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் படி நமது பெயர் - முகவரி விவரம் சரியாக உள்ளதா என எளிதில சோதித்துக்கொள்ளலாம்.

 நீங்கள் இங்கு கிளிக செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
வருகின்ற விண்டோவில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்துள்ள உங்கள சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்யுங்கள்.(இப்போது உங்களுடைய சட்ட மன்ற தொகுதியை மாற்றி அமைத்துள்ளார்கள்).இதில் முதலில் உள்ள வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக தேடலாம். அடுத்துள்ள வாக்காளர் பெயர் மூலம் தேட கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் வாக்காளர்பெயர் தட்டச்சு செய்யவும். நீங்கள் வாக்காளர் பெயர் தட்டச்சு செய்வதற்கு வசதியாக உங்களுக்கு தமிழ் கீ-போர்ட் இணைத்துள்ளார்கள். தேவையான எழுத்தை கிளிக் செய்ய அதன் மெய்யெழுத்து அனைத்தும் வரும். தேவையானதை கிளிக் செய்து பெயரை எளிதில் அமைக்கலாம்.

அடுத்துள்ள வாக்குசாவடியின் பெயர் மூலமாகவோ - தெருவின் பெயர் மூலமாகவோ எளிதில் தேடலாம்.

தேர்தல் வருவதற்கு முன் உங்கள் வாக்கு உரிமையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.ஒட்டுப்போடுங்கள். ஜனநாயக கடமையை நிலைநாட்டுங்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு உங்கள் ஓட்டு
சனநாயகத்தை நிலை நாட்டுவதே எங்கள் நோக்கு..

Wednesday, February 2, 2011

வன்னியரை பகைத்தவன் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை-திமுக ராச கைது

வன்னிய சங்க தலைவர் செ.குருவை எதிர்த்த திமுக வை சேர்ந்த ஊழல் பெருச்சாளி ராச கைது இதன் மூலம் வன்னியனை எதிர்த்தவன் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை என்பதை காலம் இவ்வுலகிற்க்கு மீண்டும் உணர்தியுள்ளது.
 
 
ரூபாய், 1.76 லட்சம் கோடி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா (வயது 47), மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக, 2007, மே 18ல் பதவியேற்றார். இடையில் நடந்த தேர்தலில், 15வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே பதவியில் தொடர்ந்தார்.இவர், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2008ல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீட்டில், ஏல முறை பின்பற்றப்படவில்லை என்றும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற முறை பின்பற்றப்பட்டதால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து எழுந்த சர்ச்சையால், 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விலகினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான கட்டடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பின், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அதே நேரத்தில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், வரும் 10ம் தேதிக்குள் விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, கடந்த டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில், ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், பல கேள்விகள் ராஜாவிடம் கேட்கப்பட்டன. பல விஷயங்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.ராஜா மட்டுமின்றி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைசல், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர்கள் சித்தார்த்த பெகுரா மற்றும் மாத்தூர், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியும், வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தலைவருமான நிரா ராடியாவிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் கடந்த திங்களன்று மூன்றாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. நேற்று முன்தினம், ராஜாவின் சகோதரர் ஏ.கே.பெருமாளிடம் விசாரணை நடைபெற்றது.

கைது: இதைத் தொடர்ந்து, நேற்று காலை, சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ராஜாவிடம் நான்காவது முறையாக விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து ராஜாவையும், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோரையும் கைது செய்தனர்.சில தொலைத்தொடர்பு கம்பெனிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் டெண்டர் நடவடிக்கைகளை மாற்றி அமைத்தது என, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து சி.பி.ஐ., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "விசாரணையில் இந்த மூவரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். வழக்கமான நடைமுறைகளை மீறி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவர்கள், கிரிமினல் கூட்டுசதி புரிந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 120பி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்' இதனை வன்னிய இனத்ததை சார்ந்தவர்கள் தங்களின் மகிழ்சியை ஒருவருக்கு ஒருவர் குறுந்தகவல் மூலம் பறிமாறி மகிழ்சியை கொண்டாடினார்கள்..


எவனாக இருந்தாலும் வன்னியனை சீண்டினா மவனே ஆப்புதாண்டா.....

பசுமைத்தாயகத்தில் இணைவோம் புது உலகம் படைப்போம்...


மருத்துவர் அன்புமணி அரசியல்வாதிகளில் தான் ஒரு மருத்துவர் என்பதை பொதுவிடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தடை, மீறினால் அபராதம் என்று இப்போது கொண்டு வந்துள்ள முனைப்பான சட்டத்தால் முழுமையாக நிரூபித்திருக்கிறார்.

பொதுவிடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்தமை குறித்து புகை ஆர்வலர்களும், புகை விரும்பாத ஆர்வலர்களும் மாறி, மாறி சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். தடை செய்தமைக்கான காரணம், புகை விடுவதால் வெளி வரும் நச்சுப் பொருளான நிகோடினால், அப்புகையை வெறுமனே சுவாசிக்கும் அக்கம்பக்கத்தினர் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு என்கிறது சுகாதாரத் துறை.

புகை பிடிப்பவர்களை அதிகம் தாக்குவது புற்றுநோயும், இதய நோயும் தான். புற்று நோயில் தொண்டை புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய், கணையத்தில் புற்று நோய் என்று நிகோடினால் தாக்கப்படும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இந்தப் புற்று நோய், வகை.. தொகையில்லாமல் தாக்கி வருகிறது. புகையிலையினால் அதிகப்பட்சமாக வாய்ப்புற்று நோய் தோன்றுகிறது. புகையிலையிலும் இந்த நிகோடின்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித குலத்தின் முக்கிய நோய் எதிரிகளில் ஒருவர் இந்த நிகோடின்தான்.
பொதுவாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களை கணக்கெடுத்தால் அதில் அதிகம் பேர் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் பழக்கம் எப்படி அமைந்ததெனில், அது மரபு ரீதியாக, வழி வழியாக ஆண்களுக்கு ஒரு அடையாளமென்ற முட்டாள்தனமான நம்பிக்கை இளைஞர்களுக்குள் ஏற்படுவதினால்தான் என்று நினைக்கிறேன்.
மேலும், மிக, மிக எளிதாக தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகளில் கிடைப்பதான ஒன்று என்பதாலும்தான் அந்தச் சனியனான ‘வெண்குழல்’ இளைஞர்களின் கைகளில் அதிகம் தவழ்ந்து வருகிறது. அடிப்படையில் மனோதிடத்தை இது அதிகப்படுத்துவதாகச் சொல்லித்தான் நிறைய ஆண்கள் இதனைக் குடிக்கிறார்கள். இந்தத் தத்துவத்தை இவர்களுக்கு உணர்த்தியது, சந்தேகமே இல்லாமல் நமது திரையுலகச் ‘சக்கரவர்த்திகள்’தான்.
திரைப்படங்களில் தங்களது ஆஸ்தான ஹீரோக்களின் புகை விடும் ஸ்டைலை பார்த்துத்தான் ரசிகர்களும் புகைப்பழக்கத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதென்னவோ மறக்க முடியாத உண்மைதான்.
எனது சொந்தக்கார அண்ணன் ஒருவர் அவர் உயிரோடு இருந்தவரையிலும் ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் குடிப்பார். ஒன்றை கீழே போடுகிறார் எனில் இன்னொன்றை பற்ற வைத்துவிட்டுத்தான் செய்வார். தீவிரமான சிவாஜி ரசிகர். “புதிய பறவை” படத்தில் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” பாடல் காட்சியின்போது செளகார்ஜானகியைப் பார்த்தபடியே சிவாஜி ஸ்டைலாக புகைவிடும் ‘நடிப்பைப்’ பார்த்துதான், தனக்குப் புகை மீது ‘வெறி’ வந்ததாக ‘உயிரோடு இருந்தபோது’ பெருமையாகச் சொன்னார்.

இப்படி சில அப்பாவிகள் வரும் ஆபத்து தெரியாமல் அதனைத் தொட்டுவிட்டு பின்பு அதனைவிட முடியாமல் இப்போதும் தவிக்கிறார்கள். எவ்வளவு விலையேற்றினாலும் வேறு ஏதாவது செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிகரெட்டுக்கென்றே தனி பட்ஜெட் போட்டுவிடுகிறார்கள் புகை விரும்பிகள்.

நமது வலையுலகத்திலும் பல இளைஞர்கள் வெண்குழல் பற்ற வைக்கும் நாயகர்களாகவே இருக்கிறார்கள். “புகை பிடிக்காதே தம்பி..” என்று சொல்ல வேண்டியவர்களே, “சிகரெட் இருக்கா..?” என்று கேட்டு வாங்கும் கொடுமையும் நமக்குள் நடக்கிறது.

நான் சந்தித்த பல பதிவர் சந்திப்புகளிலும் புகை விடுவதற்காகவே இடை, இடையே தப்பித்து ஓடும் பதிவர்களை நினைத்துக் கோபப்பட்டிருக்கிறேன். சிறந்த எண்ணங்களை, எழுத்தாக்கி, அந்த எழுத்தை ‘மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும் போதை’யாக மாற்றுவதைப் போன்ற எழுத்தாற்றல் மிக்க அசாத்தியத் திறமை படைத்தப் பதிவர்களெல்லாம், இந்தச் சனியனைக் கையில் தூக்கிக் கொண்டு திரிவதைப் பார்க்கும்போதெல்லாம் எரிச்சலாகத்தான் வருகிறது.


தனி மனித உரிமை.. தனி மனித உரிமை என்று கூச்சல் போட்டு, கோஷம் கொப்பளிக்க, கொடி பிடிப்பதற்கு இது ஒன்றும் நிஜமான தனி மனித உரிமைப் பிரச்சினையில்லை. சமூகப் பிரச்சினை.. “என்ன நோய் வருமாம்ல.. வரட்டும்.. வந்துட்டுப் போகட்டும்.. பார்ப்போம்.. எத்தனையோ சமாளிச்சிருக்கோம். இதை சமாளிக்க மாட்டோமா..” என்று வாய்ச்சவடால் விடுவதற்கு இது ஒன்றும் காசு, பணம் பிரச்சினையில்லை.. உயிர் பிரச்சினை..

புகை பிடிக்கின்ற அனைவரையுமே புற்றுநோய் தாக்குவதில்லை. ஆனால் மற்ற ஏதேனும் ஒரு நோய் தாக்கி விடுகிறது. சராரசியாக 45-லிருந்து 55 வயதுவரையில் மாரடைப்பு வந்து இறந்து போனவர்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தீர்களானால், அதில் முக்கால்வாசிப் பேர் புகைப்பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

நோய் வரும். தாக்கும்.. என்பதெல்லாம் நன்கு தெரிந்த பின்பும் புகை விடுபவர்கள் அதனை ஏற்க மறுத்து அது எங்களது உரிமை என்ற ரீதியில் பேசுவது எனக்கு முட்டாள்தனமாகப்படுகிறது. நோய் வராவிட்டால் சந்தோஷம்தான்.. ஆனால் வந்துவிட்டால்..? இந்த ரீதியில் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.. கொஞ்சம் வெளிப்படையாகப் பேசுவோமே…
இன்றைய பொருளாதாரச் சூழலில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நாள் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தாலே ஒரு மாச சம்பளத்தை மொத்தமாக கொடுத்துவிட்டுத்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை, உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகளின் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன. இதில் புகையினால் நோய் என்று வந்து நாம் மருத்துவமனையை நாடுவது, கண்ணை விற்று பின்னர் சித்திரம் வாங்கும் கதைதானே..

‘எப்படியும் நாங்கள் பொழைச்சுக்குவோம்’ என்று கும்மியடிப்பவர்கள், படுக்கையில் வீழ்ந்தால் தலகாணியை நகர்த்தி வைக்கக்கூட ஒரு ஆள் உடன் இருக்க வேண்டும் என்பதனை தயவு செய்து மறக்க வேண்டாம்.
மருத்துவமனைக்கு வந்த பின்பு உங்கள் சிகரெட்டுக்கு லைட்டர் துணையுடன் பற்ற வைத்தவரோ, அல்லது சிகரெட் வாங்கிக் கொடுத்தவரோ 24 மணி நேரமும் உடன் இருந்து உங்களைப் பார்த்துக் கொள்ளப் போவதில்லை. கஷ்டப்படப் போவது முழுக்க, முழுக்க நீங்களும், உங்களது குடும்பத்தினரும் மட்டும்தான்.

எவ்வளவோ கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் உங்களது சேமிப்பு, நீங்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் கண் முன்பே கரையும் கொடுமையை மத்திய தர வர்க்கம், அதற்கும் கீழான வர்க்கத்தினரெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது. நமது சேமிப்புதான் நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பாதுகாப்பு. அதையும் நாமே செலவு செய்துவிட்டு பின்பு நமது குழந்தைகளை பிற்காலத்தில் பணத்திற்காகக் கஷ்டப்பட வைக்கவும் கூடாது.

ஒருவிதத்தில் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து குடும்பத்தினரையும் சேர்த்து கஷ்டப்படுத்துவது அவர்களின் தனி மனித உரிமையை பாதிக்கும் விஷயம்தானே.. எப்படி உங்களுக்குப் புகைப் பிடிக்கும் பழக்கம் தனி மனித உரிமை என்கிறீர்களோ, அதே போலத்தானே உங்களது குடும்பத்தினருக்கும் இருக்கும்..

மருத்துவமனை வாழ்க்கை என்பது சாதாரணமா…? நினைத்துப் பார்த்தால் திரும்பவும் அந்த வாழ்க்கையை வேறு எந்த மனிதரும் அனுபவிக்கக்கூடாது என்றுதான் அனுபவித்த எந்தவொரு மனதும் நினைக்கும். நானும் அதனால்தான் சொல்கிறேன்.
எனது தந்தை எப்போதும் சார்மினார் சிகரெட்தான் குடிப்பார். சிகரெட்டிற்கு காசு இல்லாதபோது சொக்கலால் பீடி குடிப்பார். இடையில் கொஞ்ச நாட்கள் சுருட்டு பிடித்தார். இப்படி அனைத்து வித வழிகளிலும், ‘புகையை விடத்தான் செய்வேன். என்னைக் கேட்கவே ஆள் இல்லை..’ என்று வீட்டில் தனி ராஜாங்கமே நடத்தினார்.

அந்த சிகரெட்டை வாங்கிவர நான்தான் போக வேண்டும். நான் இல்லாவிடில் எனது அம்மாவை அனுப்புவார். ஆனால் தான் போக மாட்டார். அவர் ஒருவகையான ஆணாதிக்கத்தில் இருந்தவர். ஆனால் பாசமானவர். இருந்தும் என்ன செய்ய..? ஆடிய ஆட்டமெல்லாம் ஒரு நாள் ஓய்ந்து போனது.

தொண்டை புற்று நோய் வந்து சாப்பிட முடியாமல், வயிற்றில் டியூப் போட்டு.. அதில் பால் ஊற்றி பின்பு, அதிலேயும் செப்டிக் ஆகி.. முடியாமல் போக.. பசி.. பசி.. பசி.. என்று பசியால் துடித்த துடிப்பு இருக்கிறதே.. சாப்பிட சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாமல் சாவது எவ்வளவு கொடுமை என்பது தெரியுமா உங்களுக்கு? பட்டினியாக இருந்தே சாவைச் சந்தித்த அந்தக் கொடுமையை என்னால் மறக்கவே முடியவில்லை, நான் இந்தக் குடி, புகை, புகையிலை, மதுவை அடியோடு வெறுப்பதற்குக் முதல் காரணம் இது ஒன்றுதான்.


புகை பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என்பதனை வளர்ந்து வரும் சமுதாயத்தினரிடம் நாம் சொல்லிப் பழக்க வேண்டிய இந்தக் காலத்தில், வீட்டுக்குள்ளே இருந்து குடிச்சுத் தொலை என்றால் எப்படி?
வெளியில் பஸ்ஸ்டாண்டில், மக்கள் கூடும் இடங்களில் புகையை சுவாசிக்கும் வாய்ப்புள்ள பொதுமக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அந்தப் புகையை இனிமேல் அளவுக்கு அதிகமாகப் ‘பிடிக்கப்’ போகிறார்கள். நமது ஆணாதிக்கம் சார்ந்த சமூகத்தில் ஏற்கெனவே குடிகார ஆண்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது அரசே உரிமம் கொடுத்துவிட்டதைப் போல் இருக்கிறது இந்த விதிமுறை.
பிள்ளைகளுக்கு அடையாளங்களாக இருக்க வேண்டிய அப்பன் வீட்டுக்குள்ளேயே இருந்து சிகரெட் குடித்தால், பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? அந்தப் பழக்கம் தவறு என்ற மனப்பான்மை அவர்களுக்குள் எப்படி ஏற்படும்? ‘நம்ம அப்பாவே குடிக்கிறார்.. நாமளும் குடிப்போம்’ என்றுதான் இப்போது விடலைப் பசங்கள் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனை ஊக்குவிப்பதைப் போல் உள்ளது மறைமுகமான இந்த அனுமதி. இதற்கு என்ன தீர்வு என்பதையும் நாம் இப்போது யோசிக்க வேண்டும்.
இந்தப் புகையால் மட்டும்தான் நோய் வருகிறதா..? பேருந்துகள் விடும் கட்டுபாடற்ற புகையினாலும்தான் நோய் வருகிறது. அதனால் பேருந்துகளை தடை செய்துவிடுவார்களா என்றெல்லாம் நமது ‘வலையுலக சிங்கங்கள்’ கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
புற்றுநோய் தாக்கியவர்களில் தானாகவே நோயை வரவழைத்துக் கொண்ட வகையினர்தான் அதிகம் என்பது மருத்துவக் குறிப்புகள் சொல்லும் உண்மை. எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறைந்த சதவிகிதத்தினர்தான். இதற்கு யாரையும் காரணமாகச் சொல்ல முடியாது. இந்தக் குறைந்த சதவிகிதத்தினருக்காக பெரும்பான்மை சதவிகிதத்தினர் செய்வது சரி என்று சொல்லிவிட முடியுமா என்ன..?

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு கிராமம் முழுக்கவே சிறுநீரகத்தில் கோளாறு, பலருக்கு புற்று நோய், சிலருக்குத் தோல் நோய், இன்னும் பலருக்கு யானைக்கால் நோய் என்று பல வியாதிகளும் ஒட்டு மொத்தமாகத் தாக்கியிருக்கும் விஷயங்களும் இப்போது பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன.

இவைகள் அந்தந்தப் பகுதிகளில் நிலவி வரும் தட்பவெப்பநிலை, உண்ணும் உணவு, பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் பாதிப்பாகத்தான் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. இதனால் ‘முதலில் அங்கே சரி செய்துவிட்டு பின்பு இங்கே வா..’ என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம்தானே..

“ஏன் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். சிகரெட் குடித்தால் புற்றுநோய்.. இதே புற்றுநோய் மதுபானம் அருந்தினாலும் வருகிறதே.. அதனை தடை செய்யுங்கள். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து சம்பாதிக்கத் தெரிகிற அரசாங்கத்திற்கு சிகரெட் பிடிப்பது மட்டும்தான் குற்றமாகத் தெரிகிறதா..?” என்றும் வாக்குவாதங்கள் தொடர்கின்றன.

இதுவும் தவறுதான்.. ஆனால் தவறு என்று நினைப்பவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழக நிலவரப்படி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால், நமது கஜானா அடுத்த நொடியே காலியாகிவிடும். அடுத்த மாத இலவசத் திட்டங்களுக்கு பைசா இருக்காது. இலவச் திட்டங்கள் இல்லாமல் போனால் அடுத்து மறுபடியும் ஆட்சிக்கு வர முடியாது.. எது முக்கியம் நாம் ஆட்சிக்கு வருவது முக்கியமா? அல்லது மக்கள் உயிர் முக்கியமா..?

இந்தப் பட்டிமன்றத்தில் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவது மட்டுமே முக்கியம். மக்கள் குடிகாரர்களாக மாறி சாவது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். இனிமேல் உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது நீங்கள்தான். ஆனாலும் தடை செய்யப்பட அதிகாரமுள்ள துறைகளில், தடை செய்து காப்பாற்றப்பட வேண்டிய சில உயிர்களையாவது காப்பாற்றலாமே.. அது சரிதானே.. அதைத்தான் மருத்துவர்  அன்புமணி இப்போது செய்திருக்கிறார்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வு ஒன்றுதான். அது சிகரெட், பீடி, புகையிலை, மது போன்ற நோய்வாய்ப்பட வாய்ப்புள்ள அனைத்து வகை போதை வஸ்துக்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்யப்படுதல் வேண்டும். ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது எனக்குத் தெரியவில்லை.

நாட்டின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் கிடைக்கும் வருவாயில் 40 சதவிகிதம் இந்த வஸ்துக்கள் மூலமாகவே வருகிறது என்கிறார்கள். உண்மை நிலவரம் தெரியவில்லை. பணம் கொட்டும் துறையாக வளர்ந்து செழித்திருக்கும், இந்த புகையிலை சார்பான தொழில்களை தடை செய்து அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டத் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டுமெனில் அதற்கெல்லாம் தொலைநோக்கோடு செயல்படக்கூடிய ஒரு அரசாங்கம் வேண்டும்.

அடுத்து ஆட்சியில் அமர்த்துவது முதல் மகனையா அல்லது, இரண்டாவது மகனையா.. மகளா, பேரனா, வளர்ப்பு மகனா, உடன் பிறவா சகோதரியா, சகோதரியின் உடன் பிறந்த சகோதரர்களா, ராஜகுருவா என்றெல்லாம் நமது அரசியல்வாதிகளின் சிந்தனை சென்று கொண்டிருக்கும்போது, இந்த தொலை நோக்குப் பார்வை அவர்களுக்கு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியவில்லை.
முன்னாள் அமைச்சர் அன்புமணி பொது இடங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை இந்தச் சட்டத்தின் மூலம் காட்டிவிட்டார்.

இனி நாம் நமது தாய்க்குலங்கள் மீதுதான் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லத்தில் கண்ணியத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுக்குத்தான் உள்ளது என்ற நோக்கில் தாய்க்குலங்கள் வீட்டிற்கு உள்ளேயும் இதே போல் தடை உத்தரவு கொண்டு வந்தார்களானால், அடுத்த இரண்டாவது தலைமுறையிலாவது புகையிலை இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

அப்படியொரு சூழலை நாம் உருவாக்க நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும், போதைப் பொருட்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வை நமது பிள்ளைகளிடத்தில் நாம் கற்பிக்க வேண்டும். அது நமது கடமையும்கூட..

போதைப் பொருட்களை ஒழிப்போம்..
புகையில்லா உலகத்தைக் காண்போம்..

பசுமைத்தாயகத்தில் இணைவோம் புது உலகம் படைப்போம்...