நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, January 5, 2011

சினிமாக்காரனுங்க அரசியலுக்கு வராதிங்க!!! உங்களுக்கு தகுதியில்லை!!!

திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது என்பது தென்னிந்தியாவில் அதிகம். (ஏனென்றால்  இங்கே தான் சினிமா பைத்தியங்கள் அதிகம், அதுவும் ரசிகர் மன்றங்கள் பெயரில்...,) அங்கே கொஞ்ச காலம் இருக்க வேண்டியது!
வாய்ப்புகளின்றி, வயதாகிவிட்டதாலும், சீந்துவாரின்றி, போணியாகவில்லையெனில், அந்த முகம், பெயர் தெரிந்த விளம்பரத்தில், ஏதோ இவர்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற அவதரித்த புருஷர்களாய், அரசியலுக்கு வருவேன்! வந்துவிட்டேன்!  இனி நாட்டை மாற்றிக் காட்டுவேன்! ஊழலை ஒழிப்பேன்! ஊறுகாய் போடுவேன்! என கிடைக்கும் (மைக்)ஒலிபெருக்கி முன் சினிமாவில் நடிப்பதைபோல உத்தமன் வேஷம் போட்டு நடித்து விட்டு, திரை மறைவில் செய்யும் அயோக்கிய தனங்கள் மக்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் சினிமா (ROSE பவுடர்) முகப்பூச்சு கவர்ச்சியில் மயங்கி விடுகின்றனர்.

இதில் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி, பாலக்காடு- மருதூர் கோபாலகிருஷ்ண இராமச்சந்திரன்(MGR ), மைசூர்-ஜெயலலிதா, கோபி-பாக்கியராஜ், மாயவரம் டி ராஜேந்தர், மதுரை விஜயகாந்த்,.... சீமான், சமீபத்தில் விஜய் வரை, ( இன்று அஜித் கூட நான் அரசியலுக்கு வந்தால்...? என ஒரு பேட்டி வந்துள்ளது).

இதில் மூன்று பேர் முதல்வர்களாகவும் 43 ஆண்டுகள் இந்த தமிழகத்தை ஆண்டும் விட்டனர்! இதனாலேயே இப்போதெல்லாம் ஒரு படத்தில் நடித்தவுடன், இயக்கியவுடன் அடுத்த படத்தில் பட்டப் பெயர்கள், ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்து தமிழகத்தை காக்க (கொள்ளையடிக்க) புறப்பட்டு விடுகின்றனர்!

நண்பர்களே! இனி விசயத்துக்கு வருவோம்!

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து,
ஊழலை ஒழிப்பேன்! லஞ்சத்தை ஒழிப்பேன்! என்கின்ற இவர்களின் லட்சணம் என்ன?
இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? சம்பளம் வாங்கியதற்கு ரசீது- வவுச்சர் -ல கையெழுத்து போட்டு வாங்குறாங்களா? வெள்ளையா? கருப்பு பணமாகவா??? -
சரி ஊழலை ஒழிப்பதாக வாய் கிழிய பேசும் நீங்கள் உங்கள் திரைப்பட வருமானங்கள்-இழப்புகள் குறித்து தணிக்கை உண்டா?? 
திரையரங்கத்தில் என் திரைபடத்திற்கு மிகச் சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படவேண்டும் என எவனாவது சொன்னதுண்டா? 
தன் ரசிகர்களிடம் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு நான் ஒன்றும் புதிய சமுதாய புரட்சியை படைக்க, நடிக்கவில்லை என சொன்னவருண்டா?
திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் வாங்கிய பணத்துக்கு ஒழுங்கா, உண்மையா வருமானவரி கட்டின ஒரே
ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்! 
 
போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே!  சிந்தியுங்கள்!


அப்புறம் இவர்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது எதற்க்காக???
நீங்களே  ஒழுங்காய் வரி கட்டாமல் நாட்டை அரசை ஏமாற்றுகிறீர்கள்?
நீங்கள அரசியலுக்கு வந்து சாதிக்கப் போவது என்ன? யாரை ஏமாற்றுகிறீர்கள்?  
 
பொதுவாழ்க்கையில்  தனி மனித ஒழுக்கம் பேணவேண்டும் என்ற அறிவு கொஞ்சமும் இல்லாமல், இவர்களின் திரை மறைவு வாழ்க்கையும், தனி மனித ஒழுக்கமும்,கூடாநட்பும்  பற்றி, ஒருவரை பற்றியாவது நல்ல முறையில் முன் மாதிரியாக இவரை போல என்று சொல்ல முடியுமா???
ஒரே ஒருத்(தனை)தியை காட்டிவிடுங்கள்!!! பார்க்கலாம்!
 
(விவரமாக சொல்ல ஆரம்பித்தால் பதிவின் நோக்கம் திசை மாறும்- தெரியாததொன்றுமில்லை -)

போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களே! சிந்தியுங்கள்!  

சரி! அரசியலுக்கு வந்தவர்கள், வந்துள்ளவர்கள் செய்யாத ஊழலா? அல்லது புதிதாய் அரசியலுக்கு வரும், வந்துள்ள  உங்களின் பக்கத்திலுள்ளவர்கள், உங்கள் கட்சியின் உறுப்பினர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களா? இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி ஊழலை ஒழிப்பீர்கள்?

சரி உங்கள் ரசிகர் மன்ற செலவுகளை, கட்சியின் செலவுகளை எந்த எதிர்பார்ப்புமின்றி செலவு செய்யக் கூடிய நல்ல ரசிகர்கள் ஏன் உங்கள் பின்னால் அணி திரள்கின்றனர்? அந்தந்த ஊரில் உள்ளாட்சி நிர்வாகத்தில் அவர்களே பங்குகொண்டு அந்த நற்பணிகளை அவர்கள் செய்யலாமே! ஏன் உங்கள் பின்னால் வருகின்றனர்? அத்தனை உத்தமரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் முதல் படத்திலிருந்து இன்றுவரை உங்கள் சொத்துக் கணக்கை, வருமானவரிக் கணக்கை திறந்த புத்தகமாக மக்களிடம் முன் வைக்க வேண்டியது தானே??

(அடுத்து, நேற்று விஜயகாந்தின் மச்சான் சதீஷ் ஒரு பேட்டியில், ஒரு பேனரை கிழித்தால் அங்கு நூறு பேனரை வையுங்கள் என்கிறாரே! பேனர் செலவு யாருடையது? அந்த பணம் மீண்டும் ஊழலின்றி சம்பாதிக்க முடியுமா?)

முதலில் இப்படிப்பட்ட ஆடம்பர, விளம்பர, சினிமா & அரசியலை ஒழிப்போம்!  

பின்னர் அந்த பாலக்காடு- மருதூர் கோபாலகிருஷ்ண இராமச்சந்திரன்(MGR )காலத்திலிருந்து, பிளான் பண்ணி,ரொம்ப நல்லவன் மாதிரியே, மக்கள் சேவகனாய்  நடிக்கிறது! வேர்வை சிந்தி,
(ங்கொய்யால!!!  வயல்ல, வெயில்ல, மூட்டை சுமந்து) சம்பாரிக்கற  பணத்தில ஒரு சதவிகிதத்தை தையல் மெஷின், மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பேட்டி (எனக்கு தெரிஞ்சு மூணு தான், இப்போ 50 கிலோ அரிசி மூடையும், காலேஜிலே பயன்படுத்த முடியாத பழைய Computers -இது தான் லேட்டஸ்ட்) இப்போ அரசியலுக்கு வந்த, வர்ற நடிகர்கள்  இலவசமா, இல்லாதவங்களுக்கு-  கொடுத்து, தன் கட்சியினராக ஆக்கி கொள்ளும், ஏதோ தான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த காரி-யை போல வள்ளல்களாய் காட்டி, அவர்களின் திரைமறைவு, தனி மனித ஒழுக்கக் கேட்டை மறைக்க பொய் வேஷமிட்ட, வேஷமிடும் இவர்களை நம்பியா நம் தமிழகத்தை ஆட்சி செய்ய ஒப்படைப்பது???

கிழிச்சானுங்க சினிமாக்காரனுங்க! அரசியலுக்கு வராதிங்க! உங்களுக்கு தகுதியில்லை!
போயும் போயும் இந்த கூத்தாடிகளிடம் நாட்டை கொடுத்து குட்டி சுவரானது போதாதா?

வேண்டும் ஓர் அரசியல் தூய்மை-நேர்மை-தியாக புரட்சி!


விவேகானந்தர்  என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்! வருங்காலத்தில் வளமான வலிமையான் இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார்!

 யாராவது ஒரு அவதார புருஷன் வர மாட்டானா? என ஏங்கி தவிப்பவர்கள்,
ஏன் அந்த அவதார புருஷனாய் நாம், நம் சகோதரன், நம் நண்பன் இருக்கக் கூடாது? என சிந்தித்து, அவர்களுடனும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு, நாம் விரும்பும் மாற்றத்தை, எதையும் நம்மிலிருந்து முதலாய் துவக்கலாம் என்ற எண்ணத்தோடு  அரசியலில் இணைந்து பணியாற்ற வாருங்கள்!
 
போலி வேஷதாரிகளை தலைவன், தலைவி என தூக்கி வைத்து கொண்டாடும் வன்னிய நண்பர்களே! சிந்தியுங்கள்!!!

நீங்கள் கானும் கனவை நிறைவேற்ற நம்மினத்தலைவவர் மருத்துவர் இராமதாசு, மருத்துவர் அன்புமனி இராமதாசு அவர்கள் வழி நடப்போம்..

No comments: