நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, March 4, 2011

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் 4-3-2011

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்-புகைப்படம்
<> 
<>
 














































































4-3-2011 அன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்திலிள்ள  தைலபுர தோட்டத்தில் நடைபெற்றது அதில் மருத்துவர் அய்யா பேசியவை


 உங்கள் உள்ள எண்ணங்களையும், என்னுடைய உள்ளத்தின் எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்கள். உள்ளேபோனபோது மகிழ்ச்சியோடு சென்றேன். திரும்பி வரும்போது மகிழ்ச்சியோடுதான் வந்தேன் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இன்னும் ஒன்று சேர்த்து கிடைத்து இருந்தால் மிக மகிழ்ச்சியோடு திரும்பி வந்து இருப்பேன்.
கூட்டணியில் சேர்ந்து விட்டோம். இனி நம்முடைய இலக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிகளை பெறும்.
பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனும் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 1991, 1996-ல் சமூக நீதி கூட்டணியை அமைத்தோம். அன்று முதல் இன்று வரை சமூக நீதிக்காக பாடுபட்டு வருகிறோம். பா.ம.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

மேலும் கூட்டணிவேட்பாளர்களின் தொகுதியில் 3 மடங்கு பணி செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக நம்முடைய வியர்வை துளிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிந்த தயாராக இருக்க வேண்டும்.
டெல்லி மேலவை தேர்தலில் ஏமாற்றமும், மன உளைச்சலில் இருந்தபோது, தி.மு.க. நிர்வாக குழுவில் தீர்மானம் போட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. உயர்மட்டக்குழுவை    திரும்பவும்  கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.

எப்போதும் தமிழக அரசையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நான் எந்தவித விமர்சனமும் செய்ய வில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பா.ம.க. ஒன்றும் சொல்லவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். கடந்த ஓராண்டாக இந்த கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடன்படிக்கையும் ஏற்பட்டது.
அரியலூர் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு கருணாநிதி தன்னிடம் அண்ணா கூறியதாக கூறினார். வீட்டில் 10 மற்றும் 15 பட்டுபுடவைகள் இருந்தாலும் விருந்துக்கு செல்லும்போது, ஒரு பட்டுப்புடவைதான் கட்ட முடியும். அடுத்த விழாவிற்கு செல்லும்போதுதான் அடுத்த பட்டுப்புடவையை கட்ட முடியும் என்றார்.


ஒரே ஒரு பட்டுப்புடவை வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது என்றாலும் தி.மு.க. கூட்டணிக்காகவும், அனைத்து கட்சிக்காகவும் கடந்த முறை கிடைத்த 31 என்பதை பெற்றுக்கொண்டேன். தமிழகத்தில் மேலவை நம்மால்தான் வந்தது. இதை கூட்டணி பற்றி பேசியபோது தெரிவித்தேன். அவரும் உடன் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஆமாம் என்றனர்.
பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும். யாரும் வருத்தம் அடைய வேண்டாம். பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதவிகள் தேடி வரும். தேர்தலுக்கு 35 நாட்கள்தான் உள்ளது. பென்னாகரம் தேர்தலில் அறிமுகப்படுத்திய திட்டம்தான் இந்த தேர்தலில் செயல்படுத்தபோகிறோம்.

தேர்தலில் களப்பணியாளர்களின் பணி முக்கியமானது. களப்பணியாளர்களிடம் 100 பேர் வாக்காளர் பட்டியல் உள்ளதா என்பதை ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்பட 52 பொறுப்பாளர்களும் கவனித்து அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பாமகவின் கூட்டணி மகத்தான வெற்றி பெற என்றும் அய்யா வழி நடப்போம்.மருத்துவர் சின்னய்யாவின் சொல்படி கேட்போம்

No comments: