நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, March 4, 2011

வெற்றி கனி மாங்கனி- (நாளை நமதே-தமிழகமும் நமதே...)

 

போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும்
நில்லேன், அஞ்சேன்.


வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.

புதினமோ புராணமோ இல்லை.
அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.
வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். 

வன்னியர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

அன்பார்ந்த வன்னிய குல பெருமக்களே ஒரு பணிவான வேண்டுகோள்.
 
நீவிர் எவ்வித கட்சியை சேர்ந்தவராகினும் நம்மினம் காக்க வன்னிய குலம் தழைக்க மருத்துவர் அய்யா வழி நடப்போம்
 
மாம்பழ சின்னத்தில் வாக்களிப்போம்
மருத்துவர் அய்யாவின் கரத்தை வலுபடுத்துவோம்...

 (நாளை நமதே-தமிழகமும் நமதே...)

No comments: